இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியர்களா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 8, 2020

இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியர்களா

“இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியர்களா?”


தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம்!


சென்னை, செப். 8-- தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் முக நூலில் குறிப் பிட்டுள்ளதாவது,


“மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலு வலக உதவி ஆணையர் பால முருகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள குற்றச் சாட்டு, இந்தியாவின் பன்முகத்தன் மைக்கு உருவாகி யுள்ள மாபெ ரும் அச்சுறுத் தலை வெளிப் படுத்துகிறது.


‘இந்தி தெரியாத தனக்கு, இந்திப் பிரிவில் உதவி ஆணை யர் பொறுப்பு வழங்கியதில் துளியும் விருப்பம் இல்லை’ என்றும்; இந்திப் பிரிவில் உள்ள மூன்று அதிகாரிகளும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்றும்; அலுவல் கடிதங்களும், குறிப் புகளும் இந்தியில் இருப்ப தால், புரியாமல் கையெழுத்திடும் நிலை உள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார்.


பல்வேறு தேசிய இனங் கள், மொழிகள், மதங்கள் உள்ள இந்த இந்திய நாட்டை, ஒற் றைத் தன்மை கொண்ட தாக மாற்றத் துடிக்கும் பார தீய ஜனதா கட்சியின் கபட நோக் கம் பட்டவர்த்தனமாக வெளிச் சத்திற்கு வந்துள்ளது.


இந்தி பேசுபவர்கள் மட் டுமே இந்தியர்களா?


இந்தியாவை, 'ஹிந்தி-யா’ வாக மாற்றுவதற்கு மத்திய அரசு துடிக்கிறதா?


இந்தி பேசும் மக்கள் தவிர மற்ற மொழியினர் அனை வரும் மாற்றாந்தாயின் பிள் ளைகளா?


மத்திய பா.ஜ.க. அரசு ஒட் டுமொத்த இந்தியாவுக்கான மத்திய அரசா? அல்லது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட் டுமே மத்திய அரசா?”


இவ்வாறு கேள்வி எழுப் பியுள்ளார்.


No comments:

Post a Comment