புதுடில்லி, செப்.10- கரோனாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எந்த பலனையும் தரவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார சூழல் குறித்தும் கரோனா பெருந்தொற்றை முறையாக மோடி அரசு கையாளவில்லை எனவும் காங்கிரஸ் மக்களவை உறுப் பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். ராகுல் காந்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், திட்ட மிடப்படாத ஊரடங்கு இந்திய பொரு ளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்து விட்டது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள சுட்டுரைப் பதிவில் கூறியுள்ள தாவது: சிறிய மற்றும் நடுத்தர அளவி லான தொழில்களில் தினக்கூலிகளாக பணியாற்றிய ஏழைகள், தங்கள் தினசரி வருமானத்தையே நம்பியிருந்தனர். எந்த முன் அறிவிப்பும் இன்றி நீங்கள் (பிரத மர்) ஊரடங்கை அமல்படுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளீர்கள்.
கரோனாவுக்கு எதிரான போர் 21 நாட்கள் இருக்கும் என பிரதமர் அறிவித்தார். ஆனால், 21 நாட்களில் அமைப்பு சாரா துறைகளின் முதுகெலும்பு நொறுங்கி விட்டது. அவர்கள் காப்பாற்றப்பட வேண் டும். பணம் இல்லாமல் அவர்களால் வாழ முடியாது. ஆனால், அரசு எதை யுமே செய்யவில்லை. இதற்கு பதிலாக 15-20 பணக்காரர்களுக்கு லட்சக்கணக் கான கோடி ரூபாய் மதிப்பிலான வரி களை தள்ளுபடி செய்துள்ளது.
ஊரடங்கு என்பது கரோனாவுக்கு எதிரான தாக்குதலாக இல்லை. மாறாக இந்திய ஏழைகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக உள்ளது என பதிவிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment