பட்டாசு ஆலையில் வெடிவிபத்து :  7 பெண்கள் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 5, 2020

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து :  7 பெண்கள் உயிரிழப்பு


காட்டுமன்னார்கோவில்,செப்.5,   குருங்குடி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகே இயங்கி வரும் காந்திமதி என்பவரது பட்டாசு தயாரிப்புக்கூடத்தில் நேற்று (4.9.2020) காலை 10.30 மணியளவில் காந்திமதி உள்பட 9 பெண்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது, பட்டாசில் மருந்து திணிக் கும்போது வெடித்துச் சிதறிய தீ மற்ற வெடிபண்டல்களிலும் பற்றிக் கொண்டு ஒட்டுமொத்தமாக வெடித்து தொழிற்கூடம் முழு வதையும் இருக்கும் இடம் தெரி யாதவாறு தரைமட்டமாக்கியது.


தகவலின்பேரில், காட்டு மன்னார் கோவில் தீயணைப்புப் படை வீரர்கள் வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


இதையடுத்து காட்டுமன்னார் கோவில் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் விபத்தில் இறந்த தொழிற்கூட உரிமையாளர் சின்னதுரை மனைவி காந்திமதி(58), பெருமாள் மனைவி மலர்கொடி(65), நம்பியார் மனைவி லதா(40), உத்தராபதி மனைவி சித்ரா(45), மாதவன் மனைவி ராசாத்தி(48) ஆகிய 5 பேரின் உடல்களை கைப்பற்றி காட்டு மன்னார்கோவில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் மனைவி ருக்மணி(38), ரங்கநாதன் மனைவி ரத்னாயாள் (60), முத்து மனைவி தேன்மொழி(35), நம்பியார் மகள் அனிதா(26) ஆகிய 4 பேரையும் மீட்டு மேல் சிகிச் சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.


ருக்மணி, ரத்தினம்மாள் ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இவர்களில் தேன்மொழி மற்றும் அனிதா ஆகிய இருவரும் அங்கி ருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இதையடுத்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர் சாகமூரி, எஸ்.பி. சிறீஅபி நவ், விழுப்புரம் சரக டிஅய்ஜி எழிலரசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.


No comments:

Post a Comment