நீதிபதி அருண் மிஸ்ரா பிரிவு உபசார விழாவில் பேச அனுமதி மறுப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 5, 2020

நீதிபதி அருண் மிஸ்ரா பிரிவு உபசார விழாவில் பேச அனுமதி மறுப்பு!

வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கண்டனம்


புதுடில்லி,செப்.5 நீதிபதி அருண் மிஸ்ரா பிரிவு உபசார விழாவில் தன்னை பேச அனுமதிக்கவில்லை என்று உச்ச நீதி மன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் துஷ்யந்த் தவே குற்றம் சாட்டியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா கடந்த 2.9.2020 அன்று ஓய்வு பெற்றார்.


காணொலி வாயிலாக அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க உச்சநீதிமன்ற வழக்குரை ஞர்கள் சங்கத் தலைவர் துஷ்யந்த் தவேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கான இணைய இணைப்பும் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் விழாவில் பேச விடாமல் தனது 'மைக்ரோபோன்' அணைக்கப்பட்டதாக துஷ்யந்த் தவே குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் கூறும்போது, "நீதிபதி அருண் மிஸ்ரா பிரிவு உபசார விழாவில் பேச விடாமல் வேண்டுமென்றே தடுத்தனர். இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப் டேவுக்கும், அவர் கடிதம் அனுப்பி யுள்ளார். மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு விசாரித்து அவரை குற்றவாளியாக தீர்ப் பளித்தது. இந்த விவகாரத்தில் பிரசாந்த் பூஷணுக்கு ஆதரவாக துஷ்யந்த் தவே கருத்து தெரிவித்திருந்தார். இதன் காரணமாகவே நீதிபதி அருண் மிஸ்ரா பிரிவு உபசார விழாவில் அவரை பேச விடா மல் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.


 


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  அதிகரிப்பு


மேட்டூர், செப்.5 மேட்டூர் அணைக்கு நேற்று 17 ஆயிரத்து 937 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 21 ஆயிரத்து 339 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி யிலும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒனேக்கல்லில் நேற்று காலை 18 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 22 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.   


No comments:

Post a Comment