சமூகநீதியை 1920ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடந்த மாநாட்டில் தீர்மானமாகக் கொண்டு சென்றவர்கள் வ.உ.சி.யும் தந்தை பெரியாரும்தான் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 5, 2020

சமூகநீதியை 1920ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடந்த மாநாட்டில் தீர்மானமாகக் கொண்டு சென்றவர்கள் வ.உ.சி.யும் தந்தை பெரியாரும்தான்

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பெருமிதம்



சென்னை,செப்.5, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,


வ.உ.சிதம்பரனாருக்கும் திராவிட இயக்கத்துக்குமான தொடர்பு நீண்ட நெடிய வரலாறு கொண்டது. “வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பார்த்தே நான் பொதுத்தொண்டில் ஈடுபடத் தொடங்கினேன்” என்று தந்தை பெரியார் அவர்கள் பேசியுள்ளார்கள்.


வ.உ.சிதம்பரனார் அவர்கள், சுதேசி கப்பல் கம்பெனியை நிறுவிய போது, தந்தை பெரியார் அவர்கள் நிதி வழங்கியுள்ளார்கள். தங்கள் பகுதியில் இருந்து நிதி திரட்டியும் தந்துள்ளார்கள். தமிழ் நாடு காங்கிரசு கட்சிக்குள் சென்னை மாகாண சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப் பட்டபோது, அதில் வ.உ.சி.யும் பெரியாரும் இணைந்து செயல்பட் டுள்ளார்கள். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் எனப்படும் சமூக நீதியை 1920-ஆம் ஆண்டு திருநெல் வேலியில் நடந்த மாநாட்டில் தீர்மானமாகக் கொண்டு சென்றதும் வ.உ.சி.யும் பெரியாரும் தான். சுய மரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட போது அதன் தொடக்கக் காலத்தில் நடந்த பல்வேறு மாநாடுகளுக்குச் சிறப்பு அழைப்பாளராக வந்து தலைமை உரை ஆற்றியவர் வ.உ.சிதம் பரனார். இறுதிக்காலம் வரை சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை ஆகிய வற்றுக்காகக் குரல் கொடுத்து வந்துள்ளார் வ.உ.சி. அவர்கள்.


'வீரர் சிதம்பரனார்' என்று போற்றி அவர் குறித்துத் தொடர்ந்து எழுதி யவர் அறிஞர் அண்ணா அவர்கள். தி.மு.க. ஆட்சியில் 1968ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு நடத்தப்பட்டபோது, தலைநகர் சென்னையில் வைக்கப்பட்ட பத்து சிலைகளில் ஒன்று வ.உ.சிதம்பரனார் சிலை என்பதை இந்தநாளில் நினை வூட்டக் கடமைப்பட்டுள்ளேன். கோவைச் சிறையில் இருந்தபோது செக்கிழுக்க வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார் வ.உ.சி. அந்த செக்கை நினைவுச் சின்னமாக ஆக்கியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.


1972ஆம் ஆண்டு வ.உ.சி.யின் நூற்றாண்டு விழாவை நாடு போற்றும் அளவில் மிகச்சிறப்பாகக் கொண் டாடியவர் முதல்வர் கலைஞர். அதே ஆண்டு தான் இந்திய நாடும் தனது 25ஆவது சுதந்திர தினத்தைக் கொண் டாடியது. இரண்டையும் இணைத்து தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனா ருக்குச் சிலை அமைத்த முதலமைச்சர் கலைஞர், அதனைத் திறந்து வைக்கப் பிரதமர் இந்திரா காந்தியை அழைத்து வந்திருந்தார்.


அந்த விழாவில் பேசும் போது வ.உ.சி. என்ற எழுத்துக்குப் புது விளக் கம் தந்தார் முதல்வர் கலைஞர்.


* வழக்குரைஞர்


* உரிமைக்காகப் போராடிய, வாதாடிய வழக்குரைஞர்


*  சிறை சென்ற வழக்குரைஞர் - என்று விளக்கம் அளித்தார். உரிமைக் காகப் போராடவும் வாதாடவும் சிறை செல்லவும் தயங் காத தியா கத்தின் திருவுருவான வ.உ.சிதம்பர னாரின் நினைவை நெஞ்சில் ஏந்திப்  போற்றுவோம்!


இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment