பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 5, 2020

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை

சென்னை, செப். 5’ கரோனாபரவல் கட்டுப்பாடுகளில் அரசின் விதிகளை மீறுவோருக்கு தண்டம் விதிக்கும் அவசரச்சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.


இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரச் செயலாளர் இராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது,


தனிமைப்படுத்தல் அறிவுறுத்தல்களை மீறுதலுக்கு ரூ.500, முகக்கவசம் அணியாதிருத்தல் - ரூ.200, பொது இடத்தில் எச்சில் துப்புதல் - ரூ.500, சமூக இடைவெளியை பின்பற்றாதிருத்தல் - ரூ.500, ஸ்பா, ஜிம், வணிக வளாகங்கள், பொது இடங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதிருத்தல் - ரூ.5,000, நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கான விதி மீறுதலை பொறுத்தவரை தனி மனிதர் - ரூ.500, வாகனங்கள், வணிக நிறுவனங்கள் - ரூ.5,000 என்ற அளவில் அபராதம் விதிக்கப்படும். இதன்மூலம், அரசின் விதிகளை பின்பற்றாதவர்கள் மீது அதிக அளவில் அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், செப்.14ஆம் தேதி தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இதற்கான சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்படும் என தெரிகிறது.


ஏசியன் பெயிண்ட் நிறுவனத்தின்


தொழில் முறை சேவை அறிமுகம்


கோயம்புத்தூர், செப். 5-  ஏசியன் பெயிண்ட்ஸ் ஒரு புதிய, வசதி யான மற்றும் தொந்தரவில்லாத சேவையை அறிமுகப் படுத்தி யுள்ளது.  வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கனவு இல்லத்தை உருவாக்க தொழில்முறை நிர்வாகத்துடன் தனிப்பயனாக்கப் பட்ட உள்துறை வடிவமைப்பு சேவையை வழங்குகிறது என இந் நிறுவன  மேலாண்மை இயக்குனர் அமித் சிங்கல் தெரிவித்துள்ளார்.


நோக்கியா நிறுவனத்தின் அலைபேசிகள் அறிமுகம்


சென்னை, செப். 5-  நோக்கியா  ஃபோன்களின் இருப்பிடமான   எச்.எம்.டி. குளோபல், விழாக்காலத்தை  முன்னிட்டு  4 புதிய  அலை பேசிகளை  நாடு  முழுவதும்  அறிமுகப்படுத்தியுள்ளது.


வாடிக்கையாளர்களுக்கு குறைந்த  விலையில்  சிறந்த  ஸ்மார்ட் போன்  அனுபவத்தை  உலகில்  இருக்கும்  அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கொண்டு  சேர்ப்பதே ஆகும். நோக்கியா  போனில்  நீங்கள்  எதிர்பார்க்கும்  நீடித்து  உழைக் கும்  தன்மை  ஆகியவற்றுடன்  நோக்கியா  சி3 நீங்கள்  தின மும்  பயன்படுத்துவதற்கு  ஏற்ற  நம்பகமான  துணையாய்  அமைகிறது என இந்நிறுவன தலைமை அதிகாரியான ஜுஹோ சர்விகாஸ் தெரிவித்துள்ளார். 


No comments:

Post a Comment