அமீரகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 12, 2020

அமீரகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா


வளைகுடா நாடான அமீரகத்தில் தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் 58ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் அமீரக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நேற்று (11.9.2020) கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் 142ஆம்ஆண்டு பிறந்த நாளைக் கணக்கிட்டு 142 பேர் குருதிக் கொடை அளித்தனர். மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் 58ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி 58 பேரீச்சம் கன்றுகளை நட்டனர். இவற்றை பொதுவுடைமை கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.  துரை. இரவிக்குமார் பங்கேற்றுச் சிறப்பித்தார்.


இந்திய நேரம் நேற்று மாலை 6 மணிக்கு "கொடிய கிருமி கரோனாவும், கொடியோர் வகுத்த கல்விக் கொள்கையும்" எனும் தலைப்பில் நடைபெற்ற காணொலி கருத்தரங்கிற்கு சி.கருணாநிதி தலைமை வகித்தார். தொல். திருமாவளவன், கலி. பூங்குன்றன், பீட்டர் அல்போன்ஸ், இரா.முத்தரசன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, மல்லை சத்தியா, ஆகியோர் கருத்துரை வழங்கினர். பட்டணம்மணி வரவேற்புரையாற்ற  கவிமதி நன்றி கூறினார்.


No comments:

Post a Comment