திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேதனை
சென்னை, செப்.12 தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான மறைந்த எச்.வசந்தகுமாருக்கு காணொலி மூலம் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று (11.9.2020) காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்றினார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்மொகிதீன், மதிமுக சார்பில் மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ரவி பச்சமுத்து, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈ.வெ.கி.ச.இளங்கோவன், சு.திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியை காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் கோபண்ணா ஒருங்கிணைத்து வழங்கினார். விஜய் வசந்த் நன்றியுரையாற்றினார்.
சிரித்த முகத்துக்குச் சொந்தக்காரர்
நிகழ்ச்சியில், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கரோனா என்ற கொடிய வைரஸ் தொற்றியதால் திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழ கனை இழந்ததைப் போல, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரையும் இழந் திருக்கிறோம். சிரித்த முகத்துக்குச் சொந்தக்காரர் முதன்முதலாக நம்மை எல்லாம் அழ வைத்து விட்டுச் சென்றுவிட்டார்.
இந்த நாட்டு இளைஞர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு எத்தனையோ கருத்துகள் அவரது வாழ்க்கையில் உண்டு. அவரது வாழ்க்கை மட்டு மல்ல, மரணமும் நமக்கு சில பாடங் களை ஏற்படுத்தி இருக்கிறது. அனை வரும் எச்சரிக்கையுடனும் கவனத் துடனும் இருக்க வேண்டும்.
மத்திய அரசும் மாநில அரசும் மக்களை கைகழுவி விட்டன. உங் களை நீங்களே காப்பாற்றிக் கொள் ளுங்கள் என்று சொல்லி விட்டார்கள்.
சுகாதார உதவியும் இல்லை, பொருளாதார உதவியும் இல்லை, தார்மீக உதவிகளும் இல்லை என்ற நிலையில் மக்களை மத்திய மாநில அரசுகள் கைவிட்டுவிட்டன.
இத்தகைய நெருக்கடியான காலக்கட்டத்தில் அவரது மரணம் அதிக வருத்தத்தை அளிக்கிறது, அவரது மறைவால் வாடும் அவரது மனைவி மற்றும் மகன்கள், மகள் ஆகியோருக்கும் அவரது குடும் பத்தினருக்கும், அவரது சகோதரரும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும் தமிழ்ச் சுரங்கமுமான குமரி அனந்தனுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment