சென்னை,செப்.12, பாதுகாப்புத்துறை தொழிற் சாலைகளை பொதுத்துறை நிறுவனமாக மாற்றும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
அதன்படி பாதுகாப்பு துறை ஊழியர்களின் 3 மத்திய தொழிற் சங்க சம்மேளனங்களும் தமிழ கத்தில் தொமுச அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கங்களும் மத்திய அரசின் முடிவை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. அரசு தன்னுடைய முடிவை திரும்ப பெறவேண்டுமென்று வலியுறுத்தி இத் தொழிற் சாலைகளில் பணிபுரியும் 80,000 ஊழியர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்குகின்றனர்.
No comments:
Post a Comment