சென்னை, செப். 14- ரோட்டரி சங்கம் சென்னை மித்ரா பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு சாதனை புரிந்த சென்னையை சேர்ந்தவர்களுக்கு மாதந்தோறும் விருதுகளை வழங்கி பாராட்டி வருகிறது.
அந்த வகையில் சென்னையை சேர்ந்த கல்வியாளர் சசிகலா அவர்களுக்கு சென்னை சாதனையாளர் விருதை ரோட்டரி சங்க முன்னாள் கவர்னர் அபிராமி ராமநாதன் வழங்கினார். செயலாளர் பிரவீன், தலைவர் சுரேஷ், சிறீனிவாசன், என்.ஸ்.சரவணன், சிறீவாசன் பல ராமன் ஆகியோர் முன்னிலையில் விருது வழங்கப்பட்டது. கல்வி துறை யில் 32 வருட அனுபவம் பெற்ற சசிகலா, பல கல்வி நிறுவனங்களில் முதல்வராகவும், கல்வி இயக்குநராகவும் பணி புரிந்துள்ளார்.
தொற்றுநோய் கால கட்டத்தில்
முதலீடு குறித்த வாட்ஸ்அப் விழிப்புணர்வு
சென்னை, செப். 14- இந்தியாவின் முன்னணி முதலீட்டு சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம், விநியோகஸ்தர்கள், மியூச்சுவல் ஃபண்டு முதலீடு, கண்காணிப்பு நிதி பரிமாற்ற விவரங்கள் மற்றும் பிற அத்தியாவசிய அறிக்கைகளை வாடிக்கையாளர்கள் விரல் நுனியில் பெறுவதற்காக ஒரு வாட்ஸ்அப் அலைவரிசையை தொடங்குவதாக அறிவித் துள்ளது.
இந்த தொற்றுநோய் காலகட்டத்தில், இந்நிறுவன வாடிக்கையா ளர்களுக்கு ஒரு சிறந்த வர்த்தக மற்றும் முதலீட்டு அனுபவத்தை அளிக்கும் வகையில் இந்த வாட்ஸ்அப் அலைவரிசையை இந் நிறுவனம் வழங்குகிறது. வரும் காலங்களில் இந்த வாட்ஸ்அப் அலைவரிசையில் மேலும் பல முக்கிய அம்சங் களை இணைக்க திட்டமிட்டுள்ளோம் என இந்நிறுவன தலைமை டிஜிட்டல் அதிகாரி ஜோன்ஸ் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment