ஆண்டவனுக்குத் தான் தெரியுமா?
அது ஆண்டவனுக்குத்தான் தெரியுமாம்!
எது?
இந்திய பொருளாதாரம் எப்போது எழுச்சி பெறும் என்பது!
அதை இந்தியாவின் நிதியமைச்சர் சொல்கிறார்!
ஆம். நிர்மலா சீதாராமன் சொல்கிறார்!
அட ஞான சிகாமணியே!
இதையெல்லாம் உங்களுக்கு தெரியாது என்றால், இவர் எப்படி நிதியமைச்சர்?
இவரை நிதி அமைச்சராக நியமித்தாரே அவர் என்ன பிரதம அமைச்சர்?
நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் படித்தவர் என்கிறார்கள்; அனைத்து பொருளாதார நடவடிக்கைகளிலும் கைதேர்ந்தவர் என்கிறார்கள்!
அய்யோ அய்யோ... அவருக்கு தெரியவில்லை விழுந்து கிடக்கும் இந்திய பொருளாதாரத்தை எழுந்து நிற்கச் செய்வது எப்படியென்று!
சில நாட்களுக்கு முன்னர் 'கொரானா எப்போது கட்டுப்படுத்தப்படும்?' என்ற கேள்விக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி "ஆண்டவனுக்கு தான் தெரியும்" எனும் இதே பதிலைத்தான் சொன்னார்!
அவரிடமிருந்து இதைவிட பெரிய பதிலை நாம் எதிர்பார்க்கவில்லை!
ஆனால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களிடமிருந்து பொறுப்பான பதிலை எதிர்பார்த்தோம்!
ஆண்டவனுக்குத் தான் தெரியும் என்றால் அவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு போங்களேன்! அப்படி ஒருவர் இருந்தால்?
"இல்லைங்க... அப்படி ஒருத்தரை இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை" என்றால், திறமைமிக்க தகுதி மிக்க மற்றவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டுப் போங்களேன்!
அது எப்படி பதவிப் பற்று விடும்?
உயிர் பற்றை விட உன்னதமானது ஆச்சே!
ஆள்பவனைக் காக்கும் கவசமாய் ஆண்டவன் இருக்கின்றான் என்றால், அவனிடம் ஒரு கேள்வி எதிர்க் கட்சிகள் சமூக ஆர்வலர்கள் எழுத்தாளர்கள் பலபேர் "பொருளாதாரம் எப்போது எழுச்சி பெறும்?"
"எப்போது கொரானா ஒழிந்து போகும்னு ரொம்ப காலமா கேட்டுக்கொண்டு இருக்கோமே-
ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்றால் அதை அந்த காலத்திலேயே அவர் சொல்லி இருக்கலாமே!
அப்படின்னா அதை எல்லாம் பத்தி தெரியலையா? இல்ல தெரிஞ்சிருந்தும் சொல்லலைன்னா தினம் தினமும் பிணம் பிணமாய் போய்க்கொண்டு இருக்கே? அந்த ஜனங்கள் மேல ஆண்டவனுக்கு அக்கறை இல்லையா ?
இல்ல அப்படி ஒரு ஆண்டவனே இல்லையா?
- பாலு மணிவண்ணன்
No comments:
Post a Comment