புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப் பேரவையிலிருந்து தி.மு.க. வெளிநடப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 17, 2020

புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப் பேரவையிலிருந்து தி.மு.க. வெளிநடப்பு


சென்னை, செப். 17- புதிய கல்விக் கொள்கை குறித்து பேச அனைத் துக்கட்சிக்கூட்டத்தைக் கூட்ட வேண்டும், சிறப்பு சட்டப் பேர வைக் கூட்டத்தை கூட்டவேண்டும், கல்வி அமைச்சர் பேசி அதை தீர்மா னமாக நிறை வேற்ற வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்கப்படாத தால் திமுக உறுப்பினர்கள் 16.9. 2020 சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.


சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் புதியக்கல்விக் கொள்கைக் குறித்து சில கோரிக் கைகளை வைத்தார்.


அவர் ஆற்றிய உரை வருமாறு:


“தேசிய கல்விக் கொள்கை பற்றி ஆராய இரு குழுக்களை (உயர் கல்வி, பள்ளிக்கல்வி) நியமித்துள்ளனர். பாதக அம்சங்களைப் பெற அக் குழுக்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும். தமிழும் - ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கை தமிழகத்தின் உயிர் மூச்சாக - உயிர் நாடியாக விளங்கிக் கொண்டிருக் கிறது.


ஆகவே இதுகுறித்து உடன டியாக அனைத்துக் கட்சிக் கூட் டத்தைக் கூட்டி முதல்வர் விவா திக்க வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் அழுத்தம் திருத்தமாகக் கேட்டுக்கொண்டு, சட்டப்பேர வையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றித் தரவேண்டும்.


தேசியக் கல்விக் கொள்கையை விவாதித்து - சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம், சமத்துவம் ஆகியவற்றிற் கும்,- தமிழ்மொழிக்கும் விரோத மான, 'தேசிய கல்விக் கொள்கை 2020'-அய் முழுமையாக எதிர்க்க வேண்டும்''.


இவ்வாறு அவர் உரையில் வலி யுறுத்தினார்..


ஆனால் இதுகுறித்து அரசு முடிவெடுக்க மறுத்ததால் திமுக வெளிநடப்புச் செய்தது.


வெளிநடப்பு குறித்து திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:


நான் பேசியதற்கு பள்ளிக் கல் வித்துறை அமைச்சர் விளக்கமளித் துப் பேசினார். அவரது விளக்கத் தைத் தீர்மானமாக நிறைவேற்றித் தரக் கோரினோம். அரசின் விளக் கத்தைவிடத் தீர்மானம் தான் ஒட்டுமொத்த சட்டப்பேரவை யின் எண்ணவோட்டத்தை வெளிப் படுத்தும்.


ஆனால், எங்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, இதனைக் கண்டித்துத் திமுக சார்பில் வெளிநடப்புச் செய்கிறோம்”.


இவ்வாறு ஸ்டாலின் பேசி னார். இதையடுத்து திமுக உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் மீண்டும் அவை நடவ டிக்கையில் கலந்துக்கொண்டனர்.


No comments:

Post a Comment