செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்
சென்னை, செப்.17 அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவாகிய - திருவிழாவாகிய இன்றைக்கு, வெறும் கொண்டாட்டத்தோடு நிறுத்தாமல், அவர் கூறிய கொள்கைகள், அவர் காட்டிய பாதைகள் - நம்முடைய லட்சியப் பயணத்தின் பாதைகளாகட்டும் - அவர் கண்ட களங்கள் நம்முடைய போராட்டக் களங்களாகட்டும்! அவர் வகுத்த வழி, நம்மை வழி நடத்திச் செல்லட்டும் என்று திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர் களின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2020) சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலையின்கீழ் பீடத்தில் மலர்வளையம் வைத்தும், அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும் மரியாதை செய்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியா ளர்களைச் சந்தித்தார்.
அவ்விவரம் வருமாறு:
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர் களின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2020).
தமிழகத்தினுடைய சிற்றூர், பேரூர், கிராமங் கள், பட்டணங்களில் கொண்டாடப்படுவது மட்டு மின்றி, இந்தியா முழுவதும் மாணவர்களாலும், முற் போக்குக் கருத்துள்ளவர்களாலும், ஒத்தக் கொள்கையாளர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்ற ஒரு கொண்டாட் டமாக, ஒரு திருவிழாவாக அமைந்திருக்கின்றது.
பட்டொளி வீசி அய்யிரண்டு திசைமுகத்தும்...
இந்தியா முழுவதும் மட்டுமல்ல, புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னதைப்போல, பெரியாரின் மண் டைச் சுரப்பை உலகு தொழும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, உலக நாடுகளில், அமெரிக்காவில், அய்ரோப்பிய யூனியனில், மலேசியாவில், சிங்கப்பூ ரில், இன்னும் பல்வேறு நாடுகளில், மேற்கும் கிழக்கும் ஏந்திய தலைவர், வடக்கும் தெற்கும் ஒப்புக்கொண்ட தலைவர் என்ற அளவிற்குத் தந்தை பெரியார் அவர் களுடைய தத்துவங்கள் இன்றைக்குப் பட்டொளி வீசி அய்யிரண்டு திசைமுகத்தும் தன்புகழைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
பெரியார் ஒரு காலகட்டம் - ஒரு சகாப்தம்!
பெரியார் ஒரு தனி மனிதரல்ல - பெரியார் ஒரு காலகட்டம் - ஒரு சகாப்தம் - ஒரு திருப்பம் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னது எத்தகைய பொருத்தமானது.
பெரியார் அன்றுதான் தேவைப்பட்டார் என்ப தல்ல. பெரியார் என்றும் தேவைப்படுவார்.
நேற்றும் தேவைப்பட்டார் - இன்றும் தேவைப் படுகிறார் - நாளைக்கும் தேவைப்படுவார்.
காரணம் என்னவென்றால்,
பெரியாரின் தத்துவம் சுயமரியாதை -
சுயமரியாதை மனிதனுடைய அடையாளம் -
மானத்தின் அடையாளம் -
எழுச்சியின் அடையாளம்
ஜாதி, வருணாசிரம தர்மத்திலிருந்து
மீளுவதற்குப் பெரியார் தேவை
சுயமரியாதை மட்டுமல்ல, சமத்துவம், பெண்ணடிமை நீக்குதல் - இந்த நாட்டில் கரோனா நோயைவிட, மிகப்பெரிய தொற்றுநோயாக இருக்கக் கூடிய ஜாதி, வருணாசிரம தர்மத்திலிருந்து மீளுவதற்குப் பெரியார் தேவை.
இன்றைக்குப் பெரியாருடைய கொள்கைக்கு நேரி டையான சவால்கள் களத்தில் ஏராளம் இருக்கின்றன. எனவேதான், பெரியாருடைய தத்துவங்களைக் கவச மாகக் கொண்டால்தான், அதனை முகக்கவசமாக ஏற்றுக்கொண்டால்தான், அதனைப் படைக்கலன்களாக நாம் பயன்படுத்தினால்தான், இந்தத் தொற்று நோய் களிலிருந்து நம்மைக் காப்பாற்ற முடியும் - சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும்.
என்றாலும், வெல்லுவது பெரியாராகத்தான் நிச்சயமாக இருப்பார்கள் - காரணம்,
பெரியாரின் தத்துவம் ஒரு சமூக விஞ்ஞானம் -
பெரியாரின் தத்துவம் பகுத்தறிவு அடிப்படையில் வளர்ந்திருக்கக் கூடிய ஒன்று.
அந்த வகையிலேதான், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவாகிய - திருவிழாவாகிய இன்றைக்கு, வெறும் கொண்டாட்டத்தோடு நிறுத்தாமல், அவர் கூறிய கொள்கைகள், அவர் காட்டிய பாதைகள் - நம்முடைய லட்சியப் பயணத்தின் பாதைகளாகட்டும் - அவர் கண்ட களங்கள் நம்முடைய போராட்டக் களங்களாகட்டும்! அவர் வகுத்த வழி, நம்மை வழிநடத்திச் செல்லட்டும்!
வெற்றி நமதே!
வாழ்க பெரியார்! வாழ்க பெரியார்!! வாழ்க பெரியார்!!!
வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!
அனைவருக்கும் பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகள்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடம் கூறினார்.
No comments:
Post a Comment