பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழக அரசு சட்டத்திருத்தம்
சென்னை, செப். 17- பெண் க ளுக்கு எதிரான குற்றங் களை தடுக்க, வரதட்சணை தொடர்பான மரணங்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்ச ஏழு ஆண்டு சிறை தண்டனையை, குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் தண்ட னையாக வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவையில் 16.9.2020 அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பெண்கள் மற்றும் குழந் தைகளுக்கான பாதுகாப் பினை மேலும் உறுதி செய் வதற்கு 1860ஆம் ஆண்டைய இந்திய தண்டனைச் சட் டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்ட னையை மேலும் கடுமை யாக்கிட மத்திய அரசின் அனுமதி பெற்று கீழ்க்கண்ட சட்டத் திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்.
1) பிரிவு 304(பி)யில் வர தட்சணை தொடர்பான மரணங்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண் டனையை, குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் தண்டனை யாக வழங்குதல்,
2) பிரிவு 354(பி)யில் குற்ற நோக்கத்துடன் (பெண்களின் ஆடைகளை களைதல்) செயல்படுவதற்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை தண் டனையை, குறைந்தபட்சம் அய்ந்து ஆண்டுகளாகவும், அதிகபட்சமாக வழங்கப் படும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையை கடுமையாக்கி பத்தாண்டுகளாகவும் வழங்கு தல்.
3) பிரிவு 354(டி)யில் தவ றான குற்ற நோக்கத்துடன் பெண்களை பின்தொடர்ந் தால், இரண்டாம் முறையும், தொடர்ந்தும் குற்றமிழைத் தால் தற்போது வழங்கப்படும் அய்ந்தாண்டுகள் வரையான சிறை தண்டனையை, அதிக பட்சமாக ஏழு ஆண்டுகளாக் கவும்,
4) பிரிவு 372இல் பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட் பட்ட நபர்களை விற்பனை செய்தல் மற்றும் பிரிவு 373 இல் பாலியல் தொழிலுக்காக 18 வயதுக்குட்பட்ட நபர் களை விலைக்கு வாங்குதல், தற்போது வழங்கப்படும் அதிக பட்சமான பத்தாண்டுகள் வரையிலான சிறை தண்ட னைக்கு பதிலாக, குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் வழங் குவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment