லக்னோ, செப். 15- மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான ‘நீட்’ நேற்று நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வு குறித்த அச்சத்தால் தமிழகத்தில் 3 மாணவர்கள் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டனர். இதில் மதுரையை சேர்ந்த ஜோதிசிறீ துர்கா என்ற மாணவியும் அடங்குவார்.
இந்த சம்பவங்கள் தமிழ கத்தில் பெரும் அதிர்ச்சியை யும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உள் ளனர்.
இந்த நிலையில் மாணவி ஜோதிசிறீ துர்காவின் மர ணம் தொடர்பாக சமாஜ் வாடி தலைவரும், உத்தரப்பிர தேச முன்னாள் முதல்-அமைச் சருமான அகிலேஷ் யாதவ் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மருத்துவம் படிக்க விரும்பிய ஒரு மாணவி மதுரையில் 13.9.2020 தற் கொலை செய்து கொண்ட தகவல் ஒவ்வொரு குடும்பத் துக்கும் அதிர்ச்சியை கொடுத் துள்ளது. இதற்கு யார் கார ணம்? என்பதை இதயமில்லா பா.ஜ.க கூற வேண்டும். இது ஒரு கொலை. இத்துடன் பிர தமரின் ‘மகளை பாதுகாப் போம், மகளை படிக்க வைப் போம்’ என்ற முழக்கமும் கொல்லப்பட்டு உள்ளது’ என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
No comments:
Post a Comment