என உரக்கச் சொன்னவர் அண்ணா
அண்ணா எளிமையானவர். அவரது சிந்தனைகள் வலிமை யானவை. அப்போது கல்லூரிப் புத்தகங்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கும். பாடப்புத்தகங்களைத் தாண்டி நூலகத்தில் நிறைய படித்தவர் அண்ணா. அதிலும் ஆங்கில புத்தகங்களே அதிகம். அவற்றின் சிந்தனைத் தாக்கம் அண்ணாவிடம் இருந்தது. Moscow Mob Parade என்பதுதான் அண்ணா எழுதிய முதல் கட்டுரை. சென்னையின் மேயராக இருந்த நீதிக்கட்சியை சேர்ந்த பாசுதேவ் என்பவர் மேடைகளில் ஆங்கிலத் தில்தான் பேசுவார். அதனைத் தமிழில் மொழி பெயர்ப்பு செய்தார் அண்ணா. ஆங்கில இதழின் ஆசிரியரான ‘சண்டே அப்சர்வர்’ பாலசுப்ரமணியன் அவர்களும் அண்ணாவின் ஆரம்ப கால அரசியல் பயணத்திற்கு துணை செய்தவர். நீதிக்கட்சியின் சார்பில் சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல் வியடைந்தார் அண்ணா. நீதிக்கட்சியும் சரிவை சந்தித்து வந்த காலம் அது. அப் போதுதான், திருப்பூரில் செங்குந்தர் மாநாட்டில் உரையாற்ற வந்த பெரியாரை சந்திக்கிறார் அண்ணா. அந்த நிகழ்வில், அண்ணாவின் பேச்சு பெரியா ரைக் கவர்ந்தது. பெரியாரின் செயலும் சிந்தனையும் அண் ணாவைக் கவர்ந்தன. தமிழக வரலாற்றில் அது புதிய திருப்ப மாக அமைந்தது. அண்ணாவின் சிந்தனையிலும் அதன் வெளிப் பாட்டிலும் மறுமலர்ச்சி ஏற்பட் டது.
எளிய மக்களின் உரிமை களுக்காகத் துணிவுடன் பேசும் பெரியாரின் கருத்துகளை அண்ணா கவனித்தார். அதனை கனிவு மிகு தமிழில் மேடைதோறும் முழங்கினார்-எழுதினார்-செயல்படுத்தினார். பெரியாரிடம் இணைந்தும்-பிரிந்தும் பொது வாழ்வில் அண்ணா பயணித்தாலும், தான் கண்ட- கொண்ட ஒரே தலைவர் பெரியார்தான் என்பதை உரக்கச் சொல்லி, அவரது இலட்சி யங்களை சட்டப்பூர்வமாக்கி, தனது ஆட்சி யையே பெரியாருக்கு காணிக்கையாக்கிய மகத்தான தலைவர் அண்ணா. தந்தை-மகன் எனும் கொள்கை உறவின் அடையாளம் பெரியார்-அண்ணா.
- கோவி.லெனின்
No comments:
Post a Comment