ஆதிச்சநல்லூர், சிவகளையில் தொல்பொருள் துறை இயக்குநர் உதயச்சந்திரன் ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 12, 2020

ஆதிச்சநல்லூர், சிவகளையில் தொல்பொருள் துறை இயக்குநர் உதயச்சந்திரன் ஆய்வு


தூத்துக்குடி,செப்.12, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ள ஆதிச்ச நல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் தமிழக தொல் லியல் துறையினர் மே 25ஆம் தேதி முதல் அக ழாய்வு பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.


இதில் 20 தொல்லியல் அதிகாரிகள், ஆய்வு மாண வர்கள் பங்கேற்றுள்ளனர். ஆதிச்சநல்லூரில் 72 குழி களும், சிவகளையில் 26 குழிகளும் ஏற்படுத்தப்பட் டுள்ளன.


சிவகளையில் 31 முது மக்கள் தாழிகளில் இருந்து நெல்மணிகள், தாடை பற்கள், இரும்பு கருவிகள், எழுத்து கீறல்கள் மற்றும் குறியீடுகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தொன்மை பொருட்கள் கிடைத்துள்ளன.


ஆதிச்சநல்லூரில் 24 முதுமக்கள் தாழிகளில் இருந்தும் சுடுமண் புகைப்பான், வளையல், தமிழி எழுத்து, குழந்தையின் எலும்பு கூடு, மக்கள் வாழ் விடத்தில் அவர்கள் பயன் படுத்திய வடிகால் குழாய் உள்ளிட்டவை கண்டறியப் பட்டுள்ளன.


இரு இடங்களிலும் நடக் கும் அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறை இயக்குநர் உதயசந்திரன் பார்வையிட்டார். அங்கு சேகரிக்கப்பட்ட தொன்மை பொருட்கள் கண்காட்சி யாக வைக்கப்பட்டிருந்தன. கீழடியை போலவே இங் குள்ள அகழாய்வு அறிக் கையை 24 மொழிகளில் தமிழக அரசு வெளியிட வேண்டும்,  இங்கு கிடைக்கும் பொருள்களை இந்தப் பகுதி யிலேயே காட்சிபடுத்த வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment