சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதியும், சமூக நீதியில் மிகுந்த ஆர்வலருமான ஜஸ்டிஸ் கே.எம். நடராசன் அவர்கள் 11.9.2020 அன்று கால மானார் என்று அறிந்து மிகவும் துயரம் அடைகிறோம்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, சிறந்த வழக்குரைஞராக உயர்ந்து, உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், பல்வேறு பொது அறக்கட்டளை களின் தலைவராகவும் இருந்தவர். 'விடுதலை'யின் வாசகர். திராவிடர் இயக்கப் பற்றாளர்!
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அந்தச் சமூக நீதி உணர் வாளருக்கு நமது வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
11.9.2020
No comments:
Post a Comment