தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், சீரிய கொள்கை யாளரும், கழகத்தின் பல ஆண்டுத் தோழருமான அவர் பகுத்தறிவாளர் கழகம் தொடங்கி, திராவிடர் கழகப்பொறுப்புவரை எல்லாவற்றையும் சிறப்பாக நடத்திய லட்சிய வீரர் நமது தோழர் மானமிகு பெரியாரடியான் (வயது 76) அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று (19.9.2020) காலை 11.00 மணிக்கு தூத்துக்
குடியில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் தாங்கொணாத வேதனையும், துன்பமும், துயரமும் அடைகிறோம். பல காணொலிக் காட்சிகளில்கூட கலந்துகொண்டு நம்முடன் உரையாடத் தவறாதவர். அவர் இப்படி மறைவுற்றதற்கு "இயற்கையின் கோணல் புத்தியின் விளைவு" என்பதைத் தவிர வேறு என்ன சமாதானம் கூறி ஆறுதல் பெற முடியும்?
அவரது குடும்பமே சுயமரியாதைக் குடும்பம் - கட்டுப்பாடு காக்கும், சீரிய தொண்டறத் தோழர் நல்ல பேச்சாளர் - செயல் வீரரும்கூட!
அவரை இழந்து வாடும் அவரது வாழ்விணையர், மகன் இங்கர்சால், மகள்கள், குடும்ப உறவுகள், கழகக் கொள்கை உறவுகளுக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கண்ணீர் மல்கக் கூறுவதைத்தவிர வேறு மார்க்கம் இல்லை.
அவருக்கு நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
19.9.2020
குறிப்பு: மறைந்த தி.ப.பெரியாரடியான் அவர்களின் மகன் இங்கர்சாலிடம் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் கைப்பேசிமூலம் தொடர்பு கொண்டு இரங்கலும், ஆறுதலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment