இந்து அமைப்பினர் மிரட்டல்
சென்னை,செப்.4 சென்னை மந்தைவெளியில் உள்ள ஒரு மாரியம்மன் கோவிலுக்கு அருகில் ஒருவர் பிரியாணி கடை நடத்துகிறார், இதனால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டது என்று கூறி அதனை நிர்வகித்து வருபவர் கோவிலை மூடிவிட்டார்.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள இந்து அமைப் பினர் பிரியாணி கடையை அங்கிருந்து காலிசெய்யும்படி தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக விரைவில் காவல்துறையிடம் புகார் அளித்து கடையை காலிசெய்ய முயற்சி செய்வோம். அப்படி முடியாவிட்டால் கடைக்கு வரும் வாடிக்கை யாளர் களிடம் அங்கு வாங்கக்கூடாது என்று கூறுவோம் எனக்கூறி பிரியாணிக் கடையை காலிசெய்ய முயற்சி செய்து வருகின்றனர்.
விரைவுப் பேருந்து முன்பதிவு
தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு
சென்னை,செப்.4, கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. தமிழகத்தில் இம்மாதம் முதல் தேதியிலிருந்து மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. வருகிற 7ஆம்தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து தொடங்க இருக்கிறது. இந்நிலையில், விரைவுப்பேருந்திற்கான முன்பதிவு தொடங்கும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பேருந்து ஒன்றிற்கு 26 பயணிகளுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும், முதல் கட்டமாக 524 பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரம்
புதுடில்லி,செப்.4, நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் நீக்கப்படக்கூடாது என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அரை மணி நேரம் மட்டும் கேள்வி நேரத்திற்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் எழுத்துபூர்வமான கேள்விகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், துணை கேள்விகளுக்கு அனுமதி கிடையவே கிடையாது என திட்டவட்டமாக மக்களவை மற்றும் நாடாளுமன்ற செயலகங்கள் அறிவித்துள்ளன. இதனை வரவேற்றுள்ள எதிர்க்கட்சிகள் கேள்வி நேரத்தை மேலும் 30 நிமிடங்களுக்கு நீடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளன.
No comments:
Post a Comment