ஞாயிறு போல் வந்தாரே நம்பெரியார் - குடந்தை இளஞ்சேட்சென்னி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 19, 2020

ஞாயிறு போல் வந்தாரே நம்பெரியார் - குடந்தை இளஞ்சேட்சென்னி

ஏடுகள் எல்லாமும் சமூக(க்)


               கேட்டினைப் பகுத்தறிவை எழுதாமல்


நாடுநாளும் நலிந்த போது


               நம்மண்ணில் விடிவெள்ளி ஒன்று


பாடுபட வந்ததே ; பல்லாண்டு


               அழுக்கையும், மூடத்தனங்களையும்


சாழச்சாடியே சாய்த்திட


               வந்தாரே நம்பெரியார் ஞாயிறுபோல்!


 


பெரியாரின் வழித்தடத்தில் மாறாமல்


               ஆறைநூறாக்கி; இனம்காக்க


உரியதொண்டாற்றும் ஆசிரியர்


               ஓயாத உழைப்பால் சலிப்பின்றி


நரிமாந்தர் சூழ்ச்சிகளை விடுதலையில்


               எழுதியும், பேசியும் இனஉணர்வைச்


சரியாகக் காத்துவரும் எங்கள்


               வீரமணி அய்யாவே நீடு வாழ்க!


 


விடுதலை நாளேடா? இல்லையது


               தமிழினத்தின் தன்மான நூலேடு


கெடுதலை உணராத நம்தமிழர்


               கேட்டிற்குத் துணைபோகும் இந்நாளில்


சுடுகின்ற அன்னியர் சூழ்ச்சிகளைச்


               சூரியனாய்ச் சுட்டெரிக்கும் எங்கள்


அஞ்சாத ஆசிரியர் அய்யாவே!


               வீரமணியே! வெற்றிமணியே! வாழ்க, வாழ்க!


No comments:

Post a Comment