‘நீட்’ - புதிய கல்விக் கொள்கை ஒழிப்பு விளக்க துண்டறிக்கை பிரச்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 8, 2020

‘நீட்’ - புதிய கல்விக் கொள்கை ஒழிப்பு விளக்க துண்டறிக்கை பிரச்சாரம்


கோவை, செப். 8- அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 142-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட திராவிட மாணவர் கழகத்தின் கலந் துரையாடல் கூட்டம் 5.9.2020 அன்று வெள்ளலூர் பகுத்தறிவு படிப்பகத்தில் நடைபெற்றது. 


இக்கூட்டத்திற்கு மண் டல மாணவர் கழகச் செய லாளர் மு.ராகுல் வரவேற் புரை வழங்கிட மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் த.க.கவுதமன் தலைமையேற் றார். இக்கூட்டத்திற்கு திரா விடர் கழக கோவை மண் டலச் செயலாளர் ச.சிற்றரசு, கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர், கோவை மாவட்டச் செயலாளர் தி.க. செந்தில்நாதன், மண்டல இளைஞரணிச் செயலாளர் ஆ.பிரபாகரன், மாநில மாண வர் கழகத் துணைச்செயலாளர் ரா.சி.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்து கருத் துரை வழங்கினர்.


இக்கூட்டத்தில் மாணவர் கழகத் தோழர்கள் கு.விஜயன், க.சி.தமிழ்நியூட்டன்,


கு.ஆகாஷ், செ.கார்த்தி, ஆ.பெரி யார்மணி ஆகியோர் பங் கேற்று தங்களது கருத்துக் களை பகிர்ந்து கொண்டனர். மேலும் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ம.சக்தி பழனியப்பன் மாணவர் கழக முந்தைய கால  செயல்பாடுகள் குறித்தும் வரும் காலங்களில் மாணவர் கழகத்தின் செயல் திட்டங்கள் குறித்தும் தோழர் களிடையே விவரித்தார். இறுதியாக இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மாணவர் கழகத் தோழர் வெ. யாழினி நன்றி கூற கூட்டம் முடிவடைந்தது.


இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:



  1. நீட் தேர்வினால் உயிரி ழந்த கோவை மாணவி சுபசிறீ அவர்களுக்கு ஆழ்ந்த இரங் கலை தெரிவிப்பதோடு, நீட் எனும் தேவையற்ற தேர் வினால் ஏற்படும் உயிர்ப்பலி இதுவே இறுதியாக இருக்க மாணவர்கள் அனைவரும் ‘நீட்‘ தேர்வை ஒழிக்க கழக தலைவர் அறிவிக்கும் அனைத்து போராட்டங்க ளிலும் பங்கேற்க உறுதியேற்க வேண்டும்.

  2. அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 142ஆவது பிறந்தநாளை கரோனா காலத்தை பயன் படுத்தி மாவட்ட கழகத்தோடு இணைந்து அனைத்து பகுதி களிலும் உற்சாகமாக கொண் டாட வேண்டும்.

  3. அரியலூர் மாவட்டம் தேளுர் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையை அவமதித்த சங்கிகளை வன் மையாகக் கண்டிப்பதோடு, சம்பந்தப்பட்ட குற்றவாளி களை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என தமிழக அரசை இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

  4. திராவிட மாணவர் கழ கத்தின் சார்பில் நீட் மற்றும் புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு -விளக்க பிரச்சார துண்டறிக் கைகளை அச்சிட்டு தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வின்போது துண்டறிக்கை பிரச்சாரம் செய்வது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.


No comments:

Post a Comment