'விஜயபாரதம்' என்ற ஆர்.எஸ்.எஸ். வார ஏட்டின் ஆசிரியர் திரு. வீரபாகு (வயது 71) அவர்கள் கரோனா கொடுந்தொற்று காரணமாக நேற்று (12.9.2020) காலமானார் என்ற செய்தி அதிர்ச்சிக்குரியதாகவும், மிகவும் வருத் தத்தைத் தரக் கூடியதாகவும் இருந்தது.
இரண்டொரு முறை நேரில் அவரைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது; எளிமையாக இருப்பவர். பெரியார் திடலுக்கு அவரது ஆசிரியர் குழுவோடு சென்ற சில ஆண்டுக்கு முன் வந்து சந்தித்தும் உரையாடினார்.
கொள்கையில் நேர் எதிர்முனையில் இருப்பவர்கள் என்றாலும் மனிதநேயமும் என்றும் பட்டுப் போகக் கூடாது என்பதில் உறுதியானவர்கள் பெரியார் தொண்டர்கள்.
அவரது மறைவு அவ்வமைப்புக்கு மிகப் பெரும் இழப்பு ஆகும். அவரது குடும்பத்தினருக்கும், ஆர்.எஸ்.எஸ்.-க்கும் 'விஜயபாரதம்' ஆசிரியர் குழுமத்திற்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
13.9.2020
No comments:
Post a Comment