முனைவர் நல். இராமச்சந்திரன் அவர்கள் மறைவு: பெரியார் மருந்தியல் கல்லூரியின் சார்பில் வீரவணக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 14, 2020

முனைவர் நல். இராமச்சந்திரன் அவர்கள் மறைவு: பெரியார் மருந்தியல் கல்லூரியின் சார்பில் வீரவணக்கம்

திருச்சி, செப். 14 பெரியார் மருந்தியல் கல்லூரியின் மேனாள் ஆலோசகரும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தின் மேனாள் துணைவேந்தருமான முனை வர் நல். இராமச்சந்திரன் அவர்கள் மறை வுற்றார் என்ற செய்தி கேட்டு நாங்கள் பேரதிர்ச்சிக்குள்ளானோம்! வாழ்வில் கடின உழைப்போடும் விடாமுயற்சியோ டும் செயல்பட்டால் உயர் நிலையை அடையலாம் என்பதற்கு எடுத்துக் காட் டாகத் திகழ்ந்த அறிவும் ஆற்றலும் கொண்ட பேராசிரியர் நல் இராமச்சந் திரன் அவர்கள் மறைவுற்றார் என்பதை எங்களது மனம் ஏற்றுக்கொள்ள மறுக் கிறது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் மதியுரைஞராகத் திகழ்ந்து நிர்வாகப் பணிகளிலும் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளிலும் எங்களுக்கெல்லாம் ஆலோ சகராகவும், நல் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர்கள். அறிவு ஆசான் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்ற நம் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் விருப்பத் திற்கும் எண்ணத்திற்கும் ஏற்ப திறம்பட செயல்பட்ட பெருமைக்குரியவர். பெரி யார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரி யர்கள் மற்றும் பணியாளர்களிடம் எப் பொழுதும் அன்புடனும் அக்கறையுட னும் பாசத்தோடும் பழகக் கூடியவர்கள். மடை திறந்த வெள்ளமென அறிவு நாணயத்தோடு பேசக் கூடிய அவர்களின் பேச்சையும் தொடர்ந்து எங்களுக்கு வழங்கிய வழிகாட்டல்களையும் இனி எப்படி பெறப் போகிறோம்!


அய்யா அவர்களுடைய இழப்பு பெரியார் கல்விக் குடும்பத்திற்கு மிகப் பெரிய இழப்பு! அவர்களை இழந்து வாடும் அவர்களுடைய வாழ்விணையர் பேரா. முனைவர் பர்வீன் அவர்களுக்கும் குருதிக் குடும்பம், கொள்கைக் குடும்பம் மற்றும் பெரியார் கல்விக் குடும்ப உற வுகளுக்கும் எமது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கி றோம்!


மறைந்த பேராசிரியர் முனைவர் நல். இராமச்சந்திரன் அவர்களுக்கு பேராசிரி யர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பணியாளர்கள் வீரவணக்கம் செலுத் தினர்.


No comments:

Post a Comment