ஆரியப் பள்ளி VS திராவிடப் பள்ளி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 26, 2020

ஆரியப் பள்ளி VS திராவிடப் பள்ளி

- கவிஞர் கலி.பூங்குன்றன்


திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாக திரா விடப் பள்ளி - தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் திறப்பு என்றவுடன் அடேயப்பா, ஆரியத்தின் அக் குளில் தேள் கொட்டியது போல் ஒரே அலறல்!


‘திரவிடம்‘ ஏன் என்று ஏகடியம் பேசும் சிறுபிள்ளைத் தனப் பேர்வழிகள்  இப்பொழுதாவது திராவிடர் என்பதன் வீரியத்தைப் புரிந்து கொள்ளட்டும்!



‘துக்ளக்‘ அட்டைப் படம் போடுகிறது - ஒரு வகையில் நமக்கு இலவச விளம்பரம்தான் என்றாலும் இன எதிரிகள் எவ்வளவு  ‘விழிப்பாக’ இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது. நம்மாலும் போட முடியாதா? இதோ பட்டியல்:


சங்கரமடம் என்றால் - சல்லாபத்தின் கூடாரம். உபயம்: ஜெயேந்திரர்பற்றி எழுத்தாளர் அனுராதா ரமணன்


 கோயில் என்றால் - காமக் களியாட்டப் பள்ளியறை, உபயம்: தேவநாதன்.


ஆசிரமம் என்றால் - ஆணுறைத் தொழிற்சாலை. உபயம்: சாமியார் ஆசாராம் (பகவான் கிருஷ்ணன் செய்ததைத்தான் நான் செய்தேன் என்று நீதிமன்றக் கூண்டில் ஏறி ஒப்புதல் வாக்குமூலம்)


பக்தி என்றால் - மூத்திரக் குட்டையில் குளிப்பது. உபயம்: மகா மகக் குளம் (28 சதவிகிதம் மலக்கழிவு - 40 சதவிகிதம் மூத்திரம் - தகவல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் (DT Next - 23.2.2018).


திருக்குறள் என்றால் - தீயகுறள். உபயம்: மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி.


இதிகாசம் என்றால் - ஒரு பெண் 5 கணவர்! உபயம்: மகாபாரதம் (ஆறாவதாக கர்ணன் மீதும் ஒரு கண்!)


தமிழ் என்றால் - நீஷப் பாஷை. உபயம்: சங்கராச் சாரியார் (பூஜை வேளையில் நீஷ பாஷையாம் தமிழைப் பேச மாட்டார்; ஆதாரம்: ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் பேட்டி - உண்மை 15.12.1980).


பகுத்தறிவு என்றால் - பித்தலாட்டம்! உபயம்: ‘துக்ளக்‘ சோ. ராமசாமி (ஆதாரம்: ‘துக்ளக்‘ பதில் 4.3.2009) குறிப்பு; மனிதனுக்குத்தான் பகுத்தறிவு  அதா வது - ஆறாவது அறிவு; மிருகங்களுக்குத்தான் அய்ந்து அறிவு!


பிராமணன் என்றால் - பிச்சை எடுத்துச் சாப்பிட வேண்டியவன். உபயம்: காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி (ஆதாரம்: காஞ்சி சங்கராச்சாரி யார் உபந்நியாசங்கள்  - 'கலைமகள்' வெளியீடு)


காணிக்கை என்றால் - கடவுளுக்கு இலஞ்சம் கொடுப்பது. உபயம்: உண்டியலில் பணம்போட்டால் கடவுள் கேட்டதைக் கொடுப்பார் என்ற ஏற்பாடு.


ஒரு பிரதோஷ காலத்தில் சிவனுக்குக் கீழ்க்கண்ட பொருள்களால் அபிஷேகம் செய்தால் கைகண்ட பலன் உடனே கிடைக்குமாம்.


நல்லெண்ணெய் என்றால் - பக்தி, சுகம், நலம்தரும்.


திரவியம் பொடி என்றால் - கசடுகள் நீங்கிய நறுமணம் கமழும் (Body Spray).


தண்ணீர்  (கங்கா) என்றால் - மனத் தூய்மை.


பச்சையரிசி, மாவு பொடி என்றால்  - கடன் தீரும். குபேர சம்பத் கிடைக்கும். (மல்லையாக்களை நினைவு படுத்திக் கொண்டால் நாங்கள் பொறுப்பல்ல).


தேன் என்றால் - குரல் இனிமை.


கற்கண்டு என்றால் - ஒற்றுமை (கண்டிப்பாக சங்பரிவார்கள் இது மட்டும் செய்ய மாட்டார்கள்)


கரும்புச்சாறு என்றால் - தோஷம் - பிணி நீங்கும்.


சர்க்கரை என்றால் - பகை - எதிரிகள் ஒழிவர். (ஆம், கடவுள் கருணையே வடிவமானவர்).


பழ வகைகள் என்றால் - வியாபார முன்னேற்றம் (பழக்கடைக்காரர் பழங்களை அன்றே விற்காவிட்டால் நட்டம்தான் - பழம் அழுகிவிடுமே)


பஞ்சாமிர்தம் என்றால் - நீண்ட ஆயுள், உடல்பலம், பெறும். (அய்.பி.எல். கிரிக்கெட்காரர்களின் கவனத் துக்கு...)


தயிர் என்றால் - குழந்தைப் பாக்கியம், உடல் வலு (ஸ்டெரிலிட்டி மய்யங்கள் தேவையில்லை).


இளநீர் என்றால் - ராஜயோகம்.


நெய் என்றால் - முக்தி, சுகவாழ்வு.


விபூதி என்றால் - சகல ஞானமும் கைகூடும் (‘நீட்’ பயிற்சிக்கெல்லாம் செல்ல வேண்டாம்).


சந்தனம் என்றால் - குளிர்ச்சி உண்டாகும்.


பன்னீர் என்றால் - சரும நோய்கள் தீரும். (Skin Speciality Clinic)


ஸ்வர்ணாபிஷேகம் என்றால் - ஆபரணம் அணி கலன்கள் மற்றும் லட்சுமி கடாட்சம். உபயம்: மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் தலைக்காவேரி புகழ் ஜெயேந் திர சரஸ்வதி.


இதோ ஆதாரம் பேசுகிறது:


குமுதம்: பெரிய மற்றும் சிறு கோயில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத்தகாத செயல் கள் நடைபெறுகின்றன. இதற்கு என்ன காரணம்? மக்க ளுக்குக் கடவுளின் மீது உள்ள பக்தி போய் விட்டதா?


ஜெயேந்திர சரஸ்வதி: கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அநேகப் பேர் பக்தர்களாகவே இருந்து, ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழி தேடு கிறார்கள். நாத்திகத்திற்கும் இப்படி எடுத்துப் போவ தற்கும் சம்பந்தம் இருப்பதாக நாம் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது. பண மும் - அதிகரித்துள்ளது. ('குமுதம்', 12.9.1996).


மேலும் ஆதாரம் வேண்டும் என்றால் அதே ஜெயேந்திரரையே அழைக்கலாம். காஞ்சிபுரத்தில் 1976 மே மாதம் நடந்த அகில இந்திய இந்து மாநாட்டில் பேசும்போது ஜெயேந்திரர், பக்தி  ஃபேஷனாகி விட்டது. பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது” என்று சொல்ல வில்லையா?


சிவனுக்கு இன்னின்ன பொருள்களால் அபி ஷேகம் செய்தால்  இன்னின்ன பலன்கள் கிடைக்கும் என்பது கொடுக்கல்  - வாங்கல் பிசினஸ்தானே.


***


திராவிடப் பள்ளியைத் திராவிட இயக்கம் ஆரம்பித்தால் ‘துக்ளக்குக்கும் - குருமூர்த்திகளுக் கும் குடைச்சல் ஏற்படுவானேன்?


காரணம் இருக்கத்தான் செய்கிறது - சும்மா ஆடுமா குருமூர்த்திகளின் குடுமி?


திராவிடப் பள்ளியை ஆரம்பித்தால்,  ஆரிய  - திராவிடம் பேசுவார்கள். வேதங்களின் வண்டவா ளங்களை விளக்குவார்கள். மனுநீதி ஒரு குலத்துக் கொரு நீதி என்பதைப் புட்டுப்புட்டு வைப்பார்கள்.


‘பவுத்த - சமணர் வீட்டு அழகிய பெண்களைக் கற்பழிக்கக் கடவுளே அருள்புரிவாயாக’ என்று திருஞானசம்பந்தர் பாடுவதை நினைவூட்டுவார்கள்.


காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் இந்து மகாசபை (ஆர்.எஸ்.எஸ்.)ப் பார்ப்பனன் நாதுராம் கோட்சே என்பார்கள். கீதையை ஆதாரம் காட்டிகொலையை நியாயப்படுத்தியவன் என்று அம்பலப்படுத்துவார்கள்.


சமூகநீதியைச் சொல்லிக் கொடுப்பார்கள்.  ஒவ் வொரு துறையிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் எப்படி எல்லாம் இருக்கிறது என்று புள்ளி விவரத் துடன் அலசுவார்கள்.


பார்ப்பனர்களைப்பற்றி சித்தர்கள் எப்படி எல்லாம் பாடியிருக்கிறார்கள் என்று பட்டியல் போட்டுக் காட்டுவார்கள்.


தீண்டாமை க்ஷேமகரமானது என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறியது குற்றமா இல்லையா என்று கேள்வி கேட்பார்கள்.


புராணங்களில் உள்ள கடவுள்களின் ஆபாசங் கள் குறித்து அலசுவார்கள்.


இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை எதிர்ப்பது ஏன் என்று இளைஞர்களுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள்.


இவை எல்லாம் நமக்கு எதிரானதாயிற்றே - இந்த விடயம் இவர்களோடு போகாமல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும் ஏற்பாடு  அல்லவா, எதிர்காலத்திலும் ஆபத்து இருக்கிறது என்று எண்ணும்போது ஆத்திரம் அலை மோது கிறது. அதன் எதிரொலிதான் - ‘துக்ளக்‘கின்


அட்டைப்படக் கார்ட்டூனும் வாசகங்களும். மூன்று ஆண்டுகளுக்குமுன் திமுக சரித்திரத்தை வெளி யிட்டபோது  - இதே குருமூர்த்தி ‘துக்ளக்‘கில் (5.7.2017 பக்கம் 12,13) என்ன எழுதினார்?


“திராவிட சமுதாய அரசியல் நம்பிக்கைகளிலி ருந்து வெகுவாக விலகி, கடந்த 50 ஆண்டுகளில் ஆன்மிகமயமாக மாறி விட்ட தமிழகத்துக்கு உகந்த சமுதாய அரசியல் சிந்தனை இன்னும் திமுகவில் உருவாகவில்லை. உதாரணமாக இப்போது எதற்கு ஹிந்தி எதிர்ப்பு? மேலும் அண்ணா வாயாலேயே கைவிடப்பட்ட திராவிட நாடு உள்பட திமுகவின் பல கொள்கைகள் நீர்த்துப் போய் விட்டன என்று தெரியும். பிறகு இப்போது அந்தக் கொள்கைகளை நினைவூட்டும் திமுகவின் சரித்திரத்தை வெளியிட வேண்டிய  அவசியம் என்ன?” என்று மூன்று ஆண்டுகளுக்கு முன் எழுதிய அதே சாமிநாதன் குருமூர்த்தி அய்யர்வாள்தான் இப்போது “திரா விடப் பள்ளி” உருவாவதையும், அதனை தளபதி மு.க. ஸ்டாலின் திறந்திருப்பதையும் கண்டு ஆவே சப்படுவதில், ஆத்திரப்படுவதில் ஆச்சரியம் என்ன?


நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் இன எதிரிகள் இவ்வளவு கூர்மையாகக் கவனித் துக் கொண்டு இருக்கிறார்கள் அல்லவா? அதே உணர்வினை இன்னும் சொல்லப்போனால் ஆண் டாண்டுக் காலமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள நாம் அவர்களையும் தாண்டிய மிகக் கூர் மையான பார்வையை இதில் செலுத்த வேண்டாமா?


பாதிப்புக்குக் காரணமானவர்கள் பாயும் வேகத் தைவிட, பாதிக்கப்பட்ட நம் மக்களின் பாய்ச்சல் பல மடங்கு அதிகரிக்க வேண்டாமா?


பார்ப்பன ஆதிக்க அதிகார பீடம் ஆயிரம் ஆயிரம் குரூரக் கரங்களுடனும், கூடுதல் நகங் களுடனும் சம்பூகவதைகளை மீண்டும் நடத்திடத் துடித்துக் கொண்டு இருக்கிறது.


இந்த நிலையில் திராவிடப் பள்ளிப் பாசறைகள் நமக்குத் தேவைப்படுகின்றன.


முதற்கட்டமாக திராவிட அரசியல் கட்சிகளில் உள்ள குடும்பத்து வாலிபர்களை - பிள்ளைகளை இப்பக்கம் திருப்பிட ஆவன செய்யவேண்டியது அவசிய - அவசரமான கடமை! கடமை!! கடமை!!!


ஆரியப் பள்ளியான சங்கரமடத்தில் வேதப் பள்ளி நடக்கிறது- நாம் திராவிடப் பள்ளியை நடத்து கிறோம் என்பதைப்புரிந்து கொள்வது முக்கியம்! காஞ்சியையடுத்த கலவையில் சங்கர மடம்  சார்பில் நடத்தும் வேதபாட சாலையில் படிப் போர் அனைவரும் பார்ப்பனரே (‘தினமணி’ 16.1.2005).


நாம் சரியான திசையில் பயணிக்கிறோம் என்ப தற்கு அடையாளம் - இன எதிரிகள் கக்கும் ஆத்திரம் அனலின் டிகிரிதான் என்பதை மறவாதீர்! மறவாதீர்!!


வெற்றி நமதே!


வாழ்க பெரியார்!


வளர்க பகுத்தறிவு!!


வெல்க திராவிடம்!!!


No comments:

Post a Comment