ஒற்றைப் பத்தி: சிறைபுகுமுன்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 27, 2020

ஒற்றைப் பத்தி: சிறைபுகுமுன்...


‘‘நான் இன்னும் சிறிது நேரத்திற்குள் சிறைக்குள் அனுப்பப்படுவேன். நமது இயக்க சம்பந்தமாக இனி நடக்க வேண்டியவை களை தலைவர் சவுந்தர பாண்டியனும், தோழர்


கி. ஆ.பெ. விசுவநாதமும் இருந்து கவனித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுகிறேன். இயக் கத் தோழர்களும் தலை வர்களுடன் ஒத்துழைத்து நான் வெளிவரும்வரை செவ்வனே நடைபெற ஒத்தாசை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். ஜஸ்டிஸ் கட்சிக்கு நான் தற்போது தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தபோதிலும் பொப்பிலியரசர் இருந்து, எல்லா காரியங்களையும் கவனித்துக்கொள்வார் என்ற திட நம்பிக்கை எனக்கிருப்பதனாலும் அவருடைய தலைமைப் பொறுப்பு நீங்கிவிட்டதாக மற்ற தோழர்களும் கருத மாட்டார்கள் என்ற நம் பிக்கையிருப்பதாலும் அதைப்பற்றி கவலையில் லாமலே செல்லுகிறேன்.


இந்தி எதிர்ப்பு இயக் கம் பொதுஜன இயக்க மானதனாலே, தமிழ் மக்கள் எல்லோருமே அந்த இயக்கத்தைப்பற்றி கவலை எடுத்துக்கொள் வார்கள் என்பதில் எனக் குப் பெருத்த நம்பிக்கை யுண்டு. இதைப்பற்றி யாருக்கும் நான் எதுவும் சொல்லத் தேவை யில்லை. ஆனால், பலாத் காரமில்லாமலும், துவேஷ உணர்ச்சியில் லாமலும், பலாத்காரத்துக் கும், துவேஷத்திற்கும் இடமேற்படாமலும் பார்த் துக் கொள்ள வேண்டு மென்பதுதான் எனது மனப்பூர்வமான வேண்டு கோள்.''


(‘குடிஅரசு', 7.12.1938)


1938 இல் நடைபெற்ற, இந்தி எதிர்ப்புப் போராட்டம் காரணமாக தந்தை பெரியா ருக்கு 2 வருட கடுங்காவல் தண்டனை, ரூ.2000 அப ராதமும் விதிக்கப்பட்ட நிலையில், சிறை புகுமுன் தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கை இது.


தலைவர் என்றால் இப் படித்தானே இருக்கவேண் டும்! தாம் இல்லாதபோது கட்சி சரிவர நடக்கவேண் டும்- எந்தவித பலாத்காரத் துக்கும் இடம் இருக்கக் கூடாது என்று அறிக்கை கொடுத்தார்.


ஆம், அவர்தான் பெரியார்!


 - மயிலாடன்


No comments:

Post a Comment