மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி ‘செஸ்’ ரூ. 47 ஆயிரம் கோடி அபகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 27, 2020

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி ‘செஸ்’ ரூ. 47 ஆயிரம் கோடி அபகரிப்பு

மத்திய கணக்குத் தணிக்கை அறிக்கையில் மத்திய பா.ஜ.க. அரசின் மோசடி!


புதுடில்லி, செப்.27 மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை, ஜிஎஸ்டி ‘செஸ்’ சட்டத்தை மீறி, மோடி அரசு அபகரித்து இருப் பது மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை மூலம் அம்பலமாகி இருக்கிறது.


மத்திய அரசின் வரவு - செலவு குறித்த அறிக்கையை, மத்திய தலை மைக் கணக்குத் தணிக்கை அதிகாரி, புதன்கிழமையன்று நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்தார். அதில், ரபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந் தக் குளறுபடிகள் உள்பட அரசின் பல்வேறு வரவு-- செலவுத் திட்டங்கள், அதிலுள்ள குறைபாடுகள், முறை கேடுகள் குறித்து கூறியிருந்தார்.


அதனொரு பகுதியாக, ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான ‘செஸ்’ சட் டத்தில் நடந்துள்ள முறைகேடு களையும் அம்பலப்படுத்தியுள்ளார்.


“பொது சரக்கு மற்றும் சேவை வரி விதிமுறை குறித்த தனது சொந்த சட்டத்தையே மத்திய அரசு மீறியி ருக்கிறது; ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையில் ரூ.47 ஆயிரத்து 272 கோடியை, மாநிலங்களுக்கு வழங் காமல் தன்வசமே வைத்துக் கொண் டது; அதாவது, ஜிஎஸ்டி வரி விதிப் பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கான நிதியை, மத்திய நிதி அமைச்சகம் வேறு பயன்பாட்டுக்கு உபயோகப் படுத்தி இருக்கிறது;


கடந்த 2017--18 மற்றும் 2018--19 ஆகிய ஆண்டுகளில் இந்த விதிமீறல் நடைபெற்றுள்ளது; இது ஜிஎஸ்டி இழப்பீடு சட்டம் 2017-அய் மீறிய செயல் மற்றும் சட்ட விரோதம்'' என்று சிஏஜி அதிகாரி குற்றம் சாட்டி யுள்ளார்.


“ஜிஎஸ்டி இழப்பீடு ‘செஸ்’ சட் டத்தின்படி, ஒரு ஆண்டில் வசூல் செய்யப்பட்ட அனைத்து ‘செஸ்’ வரித்தொகையும் ஜிஎஸ்டி இழப்பீடு நிதியில் எவ்வித குறையும் இன்றி சேர்க்கப்பட வேண்டும். இது மாநி லங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு இழப் பீடாக வழங்கப்பட வேண்டிய தொகையாகும். இதன்படி 2017--18 மற்றும் 2018--19- இல் ஜிஎஸ்டி இழப் பீட்டு நிதியில் சேர்க்கப்பட வேண் டியது 47 ஆயிரத்து 272 கோடி ரூபாய் ஆகும். ஆனால், இதனை மாநிலங்களுக்கு அளிக்க சட்டத்தில் எந்தப் பிரிவும் இல்லை என்று கூறி, ஜிஎஸ்டி ‘செஸ்’ வரி வசூல் தொகை ரூ. 47 ஆயிரத்து 272 கோடியையும் ஜிஎஸ்டி இழப்பீடு நிதியில் வைக் காமல் இந்தியத் தொகுப்பு நிதியில் (CFI - Consolidated Fund of India) வைத்து, தனது வேறு பல நோக்கங்களுக்கு மத்திய அரசு பயன்படுத்தியுள்ளது. அதாவது, ‘ஜிஎஸ்டி சட்டத்தில் எதற்காக இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டதோ, அதனை மீறி வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தியுள்ளது'' என்று சிஏஜி அதிகாரி கூறியுள்ளார்.


இது விதிமீறல் என்பதுடன், மற் றொரு புறத்தில் தனது இந்த செயல் மூலம், அரசுக்கான வரி வருவாயை மத்திய அரசு மிகைப்படுத்திக் காட் டியிருக்கிறது; நிதிப் பற்றாக்குறை யையும் குறைத்துக் காட்டியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


“இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து ஜிஎஸ்டி வருவாயை இழந்ததற்கு மாநிலங்களுக்கு இழப் பீடு வழங்க சட்டத்தில் எந்த ஏற் பாடும் இல்லை'' என்று மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம்தான் நாடாளுமன்றத்தில் கூறி யிருந்தார். ஆனால், மாநிலங்களுக்கு சட்டப்படி வழங்கவேண்டிய இழப் பீட்டு நிதியை மத்திய அரசு வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தி இருக் கிறது; இது சட்டமீறல் என்று மோடி அரசின் மோசடிகளை சிஏஜி அதி காரி அம்பலப்படுத்தியுள்ளார்.


No comments:

Post a Comment