விவசாயம் தொடர்பான மசோதா சட்டமானால் நாங்கள் அமல்படுத்தமாட்டோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 27, 2020

விவசாயம் தொடர்பான மசோதா சட்டமானால் நாங்கள் அமல்படுத்தமாட்டோம்

மராட்டிய மாநில அரசு திட்டவட்ட அறிவிப்பு


மும்பை, செப். 27 நாடாளுமன்ற்த்தின் இரு அவையிலும் நிறைவேற்றப்பட்ட புதிய விவசாயிகள் மசோதாவை தங்கள் மாநிலத்தில் அறிமுகப்படுத்த மாட்டோம் என்று மராட்டிய மாநில அரசு அறிவித்துள்ளது.


விவசாயத்துறை துறை தொடர்பான மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியுள்ளது.


இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த நிலையில் சிவசேனா - காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராட்டிர மாநிலத்தில், ‘‘வேளாண் சட்டத்தை அமல் படுத்த மாட்டோம்’’ என அந்த மாநில துணை முதல மைச்சர் அஜித்பவார் அறிவித்துள்ளார். புனேயில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், வேளாண் மசோதாவை மத்திய அரசு நாடாளு மன்றத்தில் அவசர கதியில் நிறைவேற்றி உள்ளதாகக் குற்றம் சாட்டினார்.


‘‘இதன் சட்டபூர்வமான தன்மை குறித்து மகாராஷ்டிர மாநில அரசு ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்ட அஜித்பவார்,’’ அதுவரை இந்த சட்டத்தை இங்கு அமல்படுத்தப்போவதில்லை’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார். ஏற்கெனவே கேரள அரசு இந்த சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்வதாக அறிவித்துள்ள நிலையில், தெலங்கானா அரசு இந்தச் சட்டம் இனிப்பு தடவிய நச்சு என்று கருத்து தெரிவித்துள்ளது. தற்போது மராட்டிய அரசு தங்கள் மாநிலத்தில் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பஞ்சாப்பில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் மேலும் 3 நாள்கள் நீட்டிப்பு!


சண்டிகர், செப்.27 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி களின் கடும் எதிர்ப்பையும் மீறி 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் தங்களது போராட்டங்களைத் தீவிரப்படுத்தி யுள்ளனர்.


குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றன. கடந்த வியாழக் கிழமை முதல் 3 நாள் ரயில் மறியல் போராட்டத்துக்கு மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி அழைப்பு விடுத்திருந்தது. நேற்றுடன் முடிவதாக இருந்த இந்த ரயில் மறியல் போராட்டத்தை மேலும் 3 நாள்களுக்கு நீட்டிப்பதாக மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி அறிவித்துள்ளது. விவசாயிகளின் இந்த ரயில் மறியல் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் ரயில் சேவைகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment