தோழர் கோ.காட்டுராஜா அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 22, 2020

தோழர் கோ.காட்டுராஜா அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு


கோமாபுரம், செப். 22- கந்தர்வக்கோட்டை இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினரும், முன்னாள் வட சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் தோழர் கா.காரல்மார்க்ஸ் தந்தையுமான தோழர் கோ.காட்டு ராஜா அவர்களின் நினைவேந்தல் மற் றும் படத்திறப்பு ஒன்றிய திராவிடர் கழக சார்பில் 3.9.2020 அன்று காலை 11.30 மணி அளவில் குட்டி பெரியார் திடல் கோமாபுரத்தில் நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் தோழர் மு.மாதவன் தலைமை தாங்கினார். தோழர் கு.ஜெய்சங்கர் அனைவரையும் வரவேற்றார்


இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் ஒன் றிய செயலாளர் தோழர் உ.அரசப்பன் அறிமுக உரையாற்றினார்.


கழக மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன், புதுக் கோட்டை மண்டலத் தலைவர் பெ.இராவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


படத்தினை கழக பொதுச்செயலா ளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் திறந்து வைத்து இரங்கலுரை ஆற்றினார்.


கலந்து கொண்டோர் அறந்தாங்கி மாவட்ட செயலாளர் க.முத்து, முனை வர் கு.திருஞானசம்பந்தம், மாவட்ட நிர் வாக குழு உறுப்பினர் தோழர் எஸ். இராஜேந்திரன்,  ஒன்றிய குழு தோழர்  க.அம்பிகாபதி, ஒன்றிய கவுன்சிலர் தோழர் ஆர்.கலியபெருமாள், மக்கள் விடுதலை ஒன்றிய செயலாளர் தோழர் ஆர்.தாமரைச்செல்வன் தோழர் மஞ்சம்பட்டி சொ.கலியமூர்த்தி, தோழர் கு.சரவணன், தோழர் அப்புலராஜ், தோழர் த.கலைச்செல்வன், திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் த.செல்வக் குமார், திராவிடர் கழக ஒன்றிய இளை ஞரணி செயலாளர் மா.தமிழ்மாறன், திராவிடர் கழக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ச.ஹரிஹரன், த.விக் னேஸ், கா.கோபாலசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இறுதியில் ஜெ.கண் ணன் நன்றியுரை கூறினார்.


No comments:

Post a Comment