மலேசியாவில் பெரியார் பிறந்த நாள் விழா-200 மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நூல்கள் இதழ்கள் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 22, 2020

மலேசியாவில் பெரியார் பிறந்த நாள் விழா-200 மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நூல்கள் இதழ்கள் வழங்கல்


மலேசிய நாட்டில் இயங்கும்புக்கிட்பெருந்தொங்தமிழ்ப்பள்ளி மற்றும் அப்பர் தமிழ்ப்பள்ளிகளில் கல்வி பயிலும் சுமார் 200 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் பிஞ்சு இதழ்களும் மற்றும் பெரியார் பிறந்தநாள் கட்டுரைகள் அடங்கிய நாளிதழ்களும் வழங்கப்பட்டன.தோட்ட நிர்வாகிகள் மன்றத்தின்(சபா) தலைவரும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் மலேசியா தலைவருமான மு கோவிந்தசாமி நூல்களை அன்பளிப்பாக வழங்கினார். மேலும் பல பள்ளிகளில் இது போன்ற நிகழ்ச்சிகள் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. .இந்த நிகழ்வுகளில் முதுபெரும்பெரியார் தொண்டர்கள்கோ. ஆவுடையார், அன்பு இதயன், புலவர்கு.க.இராமன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.


No comments:

Post a Comment