செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 14, 2020

செய்தியும், சிந்தனையும்....!

தெரிந்திருக்கிறது...


கோவில்களில் திருமணம் நடத்தப்படக் கூடாது: இந்து அறநிலையத் துறை.


காரணம், கூட்டம் என்று சொல்லப்பட்டாலும், கோவில்களில் கடவுள்களுக்கு முன்னால் கல்யாணம் செய்துகொண்டால் சுபிட்சமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் கிடையாது - ஒரு புண்ணாக்கும் கிடையாது என்பது தெரிந்திருக்கிறது.


யாரை


ஏமாற்ற...?


'நீட்' மருத்துவக் கல்லூரிக்கு மட்டும்தான் இலட்சியமா? எத்தனை எத்தனையோ படிப்புகள் இருக்கின்றனவே - மதிப்பெண்களை வைத்து மதிப்பிட முடியாது - மாணவர்களுக்குக் கவுன்சிலிங் கொடுக்கப்படும் என்றெல்லாம் அமைச்சர்கள் கருத்து.


'நீட்' கூடாது - 12 வருடம் மாணவர்கள் படித்த படிப்புக்கும் - 'நீட்' தேர்வுக்கும் சம்பந்தம் இல்லை. குறிப்பிட்ட பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்குத்தான் சாதகம் - எனவே 'நீட்' கூடாது - கூடவே கூடாது என்று கூறும் துணிவில்லாமல் - இப்படியெல்லாம் இதோபதேசம் செய்வது யாரை ஏமாற்ற?


No comments:

Post a Comment