நாடாளுமன்றம் முன்பாக ‘நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி  தி.மு.க. உறுப்பினர்கள் போராட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 14, 2020

நாடாளுமன்றம் முன்பாக ‘நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி  தி.மு.க. உறுப்பினர்கள் போராட்டம்!


புதுடில்லி, செப்.14 புதுடில்லியில் நாடாளு மன்றம் முன்பாக திமுக மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப் பினர்கள் ‘‘நீட் தேர்வைத் தடை செய்'' எனும் கோரிக்கை முழக்கத்துடன் முகக்கவசம் அணிந்தபடி நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி முழக்கமிட்டனர்.


போராட்டத்தில் திமுக மக்களவை குழுத் தலைவர் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மக்களவைக் குழுத் துணைத் தலைவர் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி மற்றும் திருச்சி சிவா,சண்முகம்,வழக்குரைஞர்வில்சன் உள்ளிட்ட மாநிலங்களவை உறுப்பினர்களும் போராட்டத்தில் பங் கேற்றனர்.


நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு


மக்களவையில் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசுகையில், மாநில பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வால் தமிழகத்தில் ஏழை மாணவர்கள் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மேலும் நீட் தேர்வால் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் 12 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment