ஒற்றைப் பத்தி - பார்ப்பனரை நீதிபதியாக ஆக்கிட மறுத்த ஆங்கில அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 14, 2020

ஒற்றைப் பத்தி - பார்ப்பனரை நீதிபதியாக ஆக்கிட மறுத்த ஆங்கில அரசு

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொல்கத்தா இந் தியாவின் தலைநகரமாக இருந்தபோது நீதிமன்ற பிரி வியூ கவுன்சில் நடைபெறுவது வழக்கம். அந்தக் கவுன்சிலில் பார்ப்பனர்கள் தலைவராக இருக்கவேண்டும் என்று அன்றைய இங்கிலாந்தின் மன்னரான அய்ந்தாம் ஜார் ஜிடம் சென்று பார்ப்பனச் செல்வந்தர்கள் முறையிட்ட னர்.


இது தொடர்பாக அய்ந் தாம் ஜார்ஜ் இந்தியாவில் உள்ள தனது ஆட்சியாளர் களுக்கு கடிதம் எழுதி விளக் கம் கேட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த ஆங்கிலேய அதி காரிகள் குழு கூறியதாவது: பார்ப்பனர்களை நீதிபதியாக நியமித்தால் அங்கு ஒருபக்கச் சார்பான நீதிதான் கிடைக்கும். அவர்களைப் பொறுத்தவரை ‘‘பார்ப்பனர்களுக்கு மட்டுமே நீதி மற்றவர்கள் அனைவரும் நீதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற மனநிலையில் உள்ள வர்கள். இந்த மனநிலையில் உள்ளவர்களை நீதிபதியாக் கும்போது அவர்கள் இரண்டு தரப்பு வாதங்களைக் கேட் டாலும், தனது தரப்பிற்குத்தான் ஆதரவு தருவார்கள். இதி லிருந்து அவர்களை அவர் களின் மத உணர்வும், வர்ணப் பாசமும் ஒதுக்கிவிடாது, அவர்கள் அதனுள்ளேயே உழன்று கிடப்பார்கள். அதற்கு மாறாக, பார்ப்பனரல்லாதவர் களை நீதிபதியாக நியமித்தால் அவர்கள் அனைத்துத் தரப்பு நீதி நியாயங்களைப் பரிவுடன் கேட்டு, நீதி தொடர்பான அரசு சட்டங்களின்படி தனது மனதில் பட்டதைச் சொல் லாமல் நீதி வழங்குவார்கள். இதையே நியாயச் சரித்திரம் என்று கூறுகிறோம். இந்த நியாயச் சரித்திரம் பார்ப்பனர் களிடம் சிறிதளவும் கிடை யாது. அவர்கள் உதட்டில் ஒன் றைக் கூறினாலும், உள்ளத் தால் அவர்களால் நீதியின் பக்கம் நிற்க முடியாது. மேலும் அவர்கள் எழுதிய கடிதத்தில் “BRAHMINS DON'T HAVE A JUDICIAL CHARACTER” என்ற தலைப்பிட்டே குறிப் பிட்டிருந்தனர்.


அவர்களுடைய அனைத் துத் தீர்ப்புகளும் வர்ண அடிப் படையில் தான் இருக்கும். அவர்கள் தங்களுக்கும், தங் களைச் சார்ந்த (பார்ப்பனர்)வர்களுக்கும் எந்தவிதத்தில் நன்மை கிடைக்கும் என்ற மனநிலையிலேயே எப் போதும் இருப்பார்கள்'' என்று கடிதத்தில் கூறியிருந்தனர்.


ஆனால், 1911 ஆம் ஆண்டு கொல்கத்தா தலை நகர் டில்லிக்கு மாறிய பிறகு, நிர்வாகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ஒட்டுமொத்த நீதி, நிர்வாகமும் டில்லி பார்ப்ப னர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது. ஒரு குறுகிய இடைவேளையில் நீதி நிர் வாகத்தில் புகுந்து கைப்பற்றி விட்டனர். அதேபோல் உருதும், பார்சியும் ஆட்சி மற்றும் நிர்வாக மொழியாக இருந்த நிலைமாறி, இந்தியு டன் சமஸ்கிருதமும் ஆட்சி பரிமாற்று மொழியாக மாறி விட்டது.


லாலாய் சிங் யாதவ்


(உத்திர் பிரதேஷ் கி பெரியார்) உத்திரப்பிரதேசத்தின் பெரியார்


- சம்யா பதிப்பகம் லக்னோ.


‘‘பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடேயாகும்'' - சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் (23.4.1957).


 - மயிலாடன்


No comments:

Post a Comment