சேலம்-சென்னை இடையே எட்டு வழிச்சாலை கைவிடுக!
மக்களவையில் எஸ்.செந்தில்குமார் (திமுக)
சேலம் - சென்னை இடையே முன் மொழியப்பட்ட எட்டு வழிப் பாதை எனது தொகுதி தருமபுரி-அரூர் வழியாக 56 கி.மீ. தூரத்திற்கு 2000 ஏக்கர் நிலத்தை பாதிக் கிறது; 2500 குடும்பங்கள் பாதிக்கப்படுகின் றன. உள்ளூர்வாசிகள், விவசாயிகள் மற் றும் பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள் ளனர். சென்னை முதல் சேலம் வரை வேலூர் வழியாகவும், திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாகவும் ஏற்கெனவே 4 முதல் 6 பாதைகள் உள்ளன. எனவே இந்த பாதைகளை 8 பாதைகளாக நீட்டிக்க முடியும். ஆனால், புதிய திட்டத்தின் கீழ் ஏராளமான விவசாய நிலங்கள் இழக்கப்படும். மேலும், ஏராளமான அரசு கட்டடங்கள் மற்றும் இயற்கை வளங்களும் பாதிக்கப்படும். தற்போதுள்ள இந்தத் திட்டத்தின்கீழ் 17 பஞ்சாயத்துகள் தருமபுரி நாடாளுமன்றத்தின் கீழ் வருகின்றன. உள்ளூர் கிராமவாசிகளும், பஞ்சாயத்துகளும் உள்ளூர் கிராமசபையில் தீர்மானத்தை நிறைவேற்ற தயாராக உள்ளன. தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அது மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதால் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செந்தில் குமார் (திமுக) மக்களவையில் பேசினார்.
வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா: பி.எஸ்.என்.எல்., எல்.அய்.சி. பணியாளர்கள் கட்டாயப் பணி நீக்கத்தை நிறுத்துக:
தனியார் கம்பெனிகள் புத்துயிர் பெறுவதற்காக அரசு கொண்டு வந்த வங்கி திவால் சட்டத் திருத்த மசோதாவை, பி.எஸ்.என்.எல். எல்.அய்.சி. போன்ற இலாபகரமான நிறுவனங்களுக்கும், அரசு நீட்டிக்க வேண்டும். இந்த நிறுவனப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கட்டாய பணிநீக்கம் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே அரசு சிறப்பு முக் கியத்துவம் அளிக்கிறது. சாமான்ய மக்களை கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை. நமது நாட்டின் தேசிய பறவையான மயில்கள் மற்றும் வாத்துகளுடன் பிரதமர் படம் எடுத்துக் கொள்வதைக் காண்கிறோம். இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். சாமான்ய மக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் திமுக எம்.பி. எஸ்.செந்தில்குமார் மக்களவையில் குரல் எழுப்பினார்.
தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் சரக்கு மாற்றும் மய்யம் அமைத்திடுக
மக்களவையில் கனிமொழி (திமுக)
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஒரு பன்னாட்டு கொள்கலன் டிரான்ஸ்-ஷிப் மெண்ட் மய்யத்தை கப்பல் அமைச்சகம் நிறுவ வேண்டும். இலங்கை துறைமுகத் துறையில் சீனாவின் அதிகரித்துவரும் முத லீடு மற்றும் இருப்பை எதிர்த்துப் போராடு வதற்கான வாய்ப்பை புவிசார் அரசியல் நன்மை வழங்குகிறது. தற்போது, 60 சதவீத இந்திய கொள்கலன்கள் கொழும்பில் அனுப் பப்படுகின்றன. இதன் காரணமாக நமது ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ஒவ்வொரு கொள்கலனுக்கும் கூடுதல் செலவு செலுத்தவேண்டும். இது நம்மை போட்டியற்றதாக ஆக்குகிறது, வர்த் தகத்தை விலை உயர்ந்ததாக மாற்றுகிறது மற்றும் அந்நிய செலாவணி வெளியே செல்ல வழிவகுக்கிறது. தூத்துக் குடியில் மய்யத்தை நிறுவு வது சேதுசமுத்திரத் திட்டம் போன்ற திட்டங்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதோடு, இலங்கையின் சுற்றுப்பாதையைத் தவிர்த்து, குறைந்த செலவு மற்றும் நேரத்தில் கிழக்கு கடற்கரை துறைமுகங்களி லிருந்து தூத்துக்குடிக்கு கொள்கலன் களை நகர்த்துவதற்கு வசதியாக இருக்கும் என்று மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார்.
அரசு போதிய நிதி ஒதுக்கி, வேளச்சேரி ஏரியை உடனடியாக சீரமைக்க வேண்டும்
மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக)
சதுப்புநிலம் மற்றும் ஈரநிலம் ஆகியவை நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம், அவற்றை பாராமரிக்க வேண்டியது நிச்சயம் அவசியம், தென்சென்னை தொகுதிக்குட் பட்ட வேளச்சேரி ஏரியில் உள்ள சதுப்பு நிலப்பகுதி குப்பைக் கிடங்காக உள்ளது, இதை பற்றி கவலைப்படாமல் அதிமுக அரசாங்கம் தமிழகத்தில் உள்ளது. மெட்ரோ வாட்டர் நீரேற்று நிலையத்தில் இருந்து வெளியேறும் அதிகப்படியான கழிவுநீர், ராஜ்பவன் கால்வாயில் கலந்து கழிவுநீர் ஏரியில் வெளியேறுகிறது. இதுபற்றி பலமுறை சென்னை மாநகராட்சியிடம் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. சம்பந்தப்பட்ட அமைச்சரை, வேளச்சேரி ஏரியை சுற்றுச்சூழல் பாரம்பரிய பகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும், அரசு போதிய நிதி ஒதுக்கி, வேளச்சேரி ஏரியை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறேன்.
கழிவுநீர் தொட்டிகளில் 288 பேர் உயிரிழந்துள்ளனர்
மாநிலங்களவையில் சண்முகம் (திமுக)
கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி கழிவு களை அப்புறப்படுத்தும் தொழிலாளர்கள் குறித்து தேசிய கணக்கெடுப்பு எதையும் மத்திய அரசு மேற்கொண்டதா? விஷவாயு தாக்கி கழிவுநீர் தொட்டிகளில் இறந்த ஊழி யர்களின் என்ணிக்கை எவ்வளவு? இவர் களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும், இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? என மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி சண்முகம் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம், கழிவு நீர் தொட்டிகளில் சுத்தம் செய்யும் ஊழியர்கள் கணக்கெடுப்பு 2018-19 ஆம் ஆண்டுகளில் 18 மாநிலங்களில் 194 மாவட்டங்களில் நடைபெற்றது. இதில், கழிவுநீர் தொட்டிகளில் உயிரிழந்த ஊழியர்களின் விவரம் மத்திய அரசிடம் இல்லை எனவும், இருப்பினும் மாநில அரசுகள் கொடுத்த தகவலின்படி 31.08.2020 தேதிக்கு முன்னர் வரை 288 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment