செ.க.பழனி - மகாலட்சுமி ஆகியோரின் இணையேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 11, 2020

செ.க.பழனி - மகாலட்சுமி ஆகியோரின் இணையேற்பு விழா


கும்மிடிப்பூண்டி மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செ.க.பழனி -.மகாலட்சுமி ஆகியோரின் இணையேற்பு விழா 31.8.2020 அன்று மீஞ்சூரில் செ.க.பழனி அவர்களின் இல்லத்தில் சடங்குகள், சம்பிரதாயங்கள் இன்றி மிக எளிமையான முறையில் வாழ்க்கை ஒப்பந்தம் நடந்தது, இந்த இணையேற்பு விழா திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் செங்குன்றம் ஏ.திராவிடமணி தலைமையில் நடந்தது. ஓவியர் ஜனாதிபதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொன்னேரி தொகுதி துணைத் தலைவர் சிவராஜ், திராவிடர் கழகத்தின் கும்மிடிப்பூண்டி மாவட்ட மகளிர் பாசறை தலைவர் பொன்னேரி கு.செல்வி, கும்மிடிப்பூண்டி மாவட்ட மேனாள் தலைவர் உதயகுமார், சிபிஎம் கட்சியின் தோழர் ஜீவா, க.பா.சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் இணையர்களின் இருவீட்டார் உறவினர்களும் கலந்து கொண்டார்கள்.


No comments:

Post a Comment