ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 17, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், சென்னை:



  • 28 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வரும் பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமா பாரதி உள்பட 32 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் மீதான கிரிமினல் வழக்கை நீதிபதி எஸ்.கே.யாதவ் தலைமையில் சி.பி.அய். சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

  • கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும் வங்கிக்கட்டுப்பாடு சட்ட திருத்த மசோதா மக் களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ், திமுக, ஆர்.எஸ்.பி., அய்.யு.எம்.எல்., ஏஅய்எம்அய்எம் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதா, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என தருமபுரி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார், காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி ஆகியோர் கருத்து தெரிவித்தனர். கடும் எதிர்ப்பையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டது.


தி டெலிகிராப்:



  • புதிய கல்விக் கொள்கையில் உயர்கல்வி நிறுவனங்களில் கொண்டு வரப்படும் மாற்றம், ஆசிரியர்கள் குறித்து அதிகளவில் பேசப்படுகிறது. ஆனால், கல்வி நிறுவனங்களில் அடிப்படைக் கட்ட மைப்பைப் பற்றி எதுவும் இல்லை என கட்டுரையாளர் பலாஸ் தேப் தெரிவித்துள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம், 12000 ஆண்டு இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய மீண்டும் தீக்‌ஷித் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக் குட்பட்ட இடத்தை ஆய்வு செய்த தேசிய அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குனர் பி.ஆர்.மணி இக்குழுவில் இடம் பெற்றுள்ளார். ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்பதை எங்களது ஆய்வுகள் மறுக்கின்றன. அதனை இந்த குழு ஆய்வு செய்து உரிய முடிவுகள் உறுதிப்படுத்தும் என்றார். இந்த குழுவில் அகில உலக பிராமணர்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ஆர். சர்மாவும் இடம் பெற்றுள்ளார்.

  • மோடி அரசின் ‘முத்ரா’ கடன் திட்டத்தில் அரசு வங்கிகள் 2017-18இல் ரூ.2.12 லட்சம் கோடியாக இருந்த கடன் தொகை, 2019-20இல் ரூ.3.82 கோடியாக அதிகரித்துள்ளது. கூடவே வாராக்கடனும் 2017-18இல் ரூ.7277 கோடியில் இருந்து 2019-20இல் ரூ.18,835 கோடியாக அதிகரித்துள்ளது. அரசு வங்கிகளுக்கு பெரும் நெருக்கடியைத் தந்துள்ளது.


- குடந்தை கருணா


17.9.2020


No comments:

Post a Comment