செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 8, 2020

செய்தியும், சிந்தனையும்....!

பா.ஜ.க. எம்.எல்.ஏ.மீது வழக்கு!


உத்தரகாண்டில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.மீது பாலியல் வன்கொடுமை வழக்கு!


இதெல்லாம் இப்பொழுது சர்வ சாதாரணம். ஜம்மு - காஷ்மீரில் ஒரு கோவில் கருவறையில் ஒரு சிறுமியை பல நாள்கள் அடைத்து வைத்து கோவில் அர்ச்சகர், பா.ஜ.க. பிரமுகர்கள் உள்பட. பாலியல் வன்கொடுமை நடத்தவில்லையா?


குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபோது, அதனைக் கண்டித்து பா.ஜ.க., சங் பரிவார் கும்பல் ஊர்வலம் நடத்தவில்லையா? பா.ஜ.க. ஆட்சி அதிகாரத் தெம்பில் எது வேண்டுமானாலும் நடக்கத்தான் செய்யும்.


கைகோர்த்துவிட்டன!


தேசியக் கல்விக் கொள்கையை நிறைவேற்றுவதில் அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பு - ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு.


திராவிடர் கழகத் தலைவர், தி.மு.க. தலைவர் ஆகியோர் இதுகுறித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். நாடு முழுவதும் குடியரசுத் தலைவர் ஆட்சியா நடக்கிறது - ஆளுநர்கள்மூலம் செயல்பாடுகளை ஊக்குவிக்க?


சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் மேலாக ஆளுநர்கள் இருக்கிறார்களா? 'எமர்ஜென்சி' என்ற பெயர்தான் இல்லை. மற்றபடி 'எமர்ஜென்சியும்', 'அர்ஜென்சியும்' கைகோர்த்து விட்டன!


எங்கே? எங்கே??


அரசு விழாக்களுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களை அழைக்காததைக் கண்டித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன் தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் திடீர் போராட்டம்.


பா.ஜ.க.வின் - நகமும், சதையுமாக அ.தி.மு.க. ஆட்சி இருப்பதால் எதிர்க்கட்சிகளை அலட்சியப்படுத்தும் தொற்று நோய் ஒட்டிக் கொண்டுவிட்டதோ? அண்ணா வளர்த்த ஜனநாயகம் எங்கே? அண்ணா தி.மு.க. வளர்க்கும் ஜனநாயகம் எங்கே? எங்கே??


என்ன நியாயம்?


சென்னை உயர்நீதிமன்றத்தில் கருப்பு கவுன், கோட்டு அணியாமல் வக்கீல்கள்வாதம்..


மாற்றம் என்பதுதான் மாறாதது. ஒரு காலத்தில் வழக்குரைஞர்கள், நீதிபதிகளைப் பார்த்து, 'ஓ மை லா(ர்)டு' (ஓ எமது கடவுளே!) என்று சொல்லும் வழக்கம் இருந்தது. அது ஒழிக்கப்பட்டது. சாட்சி கூறுவோர் கீதையை வைத்து சத்தியம் செய்யும் நிலை எல்லாம் மாறிப் போய்விட்டது.


கடவுள் பெயரால் நான் சொல்லுவது எல்லாம் உண்மை - சத்தியம் என்று கூறுவதை வற்புறுத்த முடியாது எனும் நிலை ஏற்பட்டது. நீதிமன்றத்தை விமர்சித்தால் குற்றம் - அபராதம் என்பது மட்டும் என்ன நியாயமோ!


No comments:

Post a Comment