ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 26, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:



  • நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு எதிர்ப்பு சக்தியைத் தருவதே எதிர்க்கட்சிகளின் பயம் என மூத்த பத்திரிக்கையாளர் சாயித் நக்வி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களைக் கண்டித்து நாடு முழுவதும் சாலை மறியல், ரயில் மறியல் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டம் கடுமையாக இருந்தது.

  • அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக இரு நூறுக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ ஜெனரல்கள், அட்மிரல் கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


டெக்கான் கிரானிகல், சென்னை:



  • மருத்துவக் கல்வியில் முது நிலைப் படிப்புக்கான நூறு இடங் களை தனியார் கல்லூரிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை தாரை வார்த்துள்ளது. இதன் காரணமாக 524 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு இடம் கிடைக்காமல், 298 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளதை சென்னை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டி, இது குறித்து உரிய விவரங்களை அளித்திட மத்திய சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவறு. அதைவிட, காவல்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நீங்க பல தலைமுறை ஆகும் என முன்னாள் அமைச்சர், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்சித் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


தி டெலிகிராப்:



  • மோடி அரசின் வேளாண் மசோதாக்கள், விவசாயிகளை அடிமைப்படுத்தும். ஆனாலும் விவசாயிகள் போராடி இந்த அடக்கு முறையில் இருந்து விடுபடுவார்கள். விவசாயிகளின் போராட்டம் சுதந்திரத்திற்கான போராட்டத்தை நினைவுபடுத்துகிறது என காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார்.


- குடந்தை கருணா


26.9.2020


No comments:

Post a Comment