செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 11, 2020

செய்தியும், சிந்தனையும்....!

‘நீட்' ஒரு பார்ப்பனப் பின்னணியே!


'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரி தி.மு.க. இளைஞரணி, மாணவரணியினர் தமிழ்நாடு முழுவதும் செப்.9 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்.


'நீட்' என்னும் கொடுவாளை ரத்து செய்யாதவரை சமூகநீதியின் உயிரைக் காப்பாற்ற முடியாது. முடியவே முடியாது. 'நீட்' தேர்வு வந்த பிறகு தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றிய புள்ளி விவரத்தைப் பார்த்தால் இது புரியும்.


ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப்புற மக்களும் கிளர்ந்து எழாவிட்டால், டாக்டர் ஆகலாம் என்பது - பச்சைப் பகற்கனவே!


திட்டமிட்டே பழிவாங்கும் பார்ப்பன சதியே 'நீட்'டின் பின்னணி!


ஓநாய் சைவ வேடமா?


இந்திய ஊடகம் உலகளாவிய நற்பெயரைப் பெறவேண்டும். - பிரதமர் மோடி.


ஓ, அப்படியா! ஊடகங்களின் கழுத்தை நெரிப்பது, ஆட்சிக்கு எதிராகக் கருத்துகள் சொல்லும் ஊடகவியலாளர்களை வெளியேற்றுவது என்பதை வழக்கமாகக் கொண்ட ஓர் ஆட்சியின் பிரதமரா இதைப்பற்றிப் பேசுவது?


சரிவே


சரித்திரம்!


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.8 சதவிகிதம் சரியும்.


சரிவு என்பதைத் தவிர இந்திய ஆட்சியில் உயர்வு என்பதை எப்போது கேள்விப்பட்டுள்ளோம்?


‘நீட்'டாதே கொடு வா¬(ல)ள!


'நீட்' தேர்வைத் தள்ளி வைக்குமாறு கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!


8 மாநில அரசுகள் கோரினால் என்ன, மாணவ - மாணவிகள் தற்கொலை செய்து கொண்டால்தான் என்ன, மத்திய அரசும் சரி, நீதிமன்றமும் சரி, 'நீட்' வாளைக் கூர்தீட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு  - மத்திய அரசானாலும் சமூகநீதி தேவை! தேவை!!


‘அப்படி


போடுங்க!'


சென்னை ஜி.எஸ்.டி. துறையில் உதவி ஆணையராகப் பணியாற்றும் பாலமுருகன் சில நாட்களுக்குமுன்  அவரது அலுவலகத்தில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்தியில் எழுதும்  குறிப்புகளை, இந்தி தெரியாத காரணத்தால் எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு என்பதுபோல -


இந்த அதிகாரி


8 ஆண்டுகள் மகாராட்டிர மாநிலத்தில் பணியாற்றியுள்ளார் என்று உயர் அதிகாரி (கமிஷனர்) கூறியுள்ளதற்குப் பதிலடியாக உதவி ஆணையர் பாலமுருகன் எழுப்பியுள்ள கேள்வி என்ன தெரியுமா? 'சென்னையில் 30 ஆண்டுகள் பணியாற்றிய வட மாநில அதிகாரிகளைப் பார்த்து தமிழ் தெரியுமா? என்று கேட்க முடியுமா? என்று போட்டாரே ஒரு போடு!


பலே! பலே!!


காப்பாற்றாது....


சாலையோர வியாபாரிகளுடன் கலந்துரையாடினார் பிரதமர் நரேந்திர மோடி.


'சாலையோரத்திலே வேலையற்றதுகள் - மன்னா! அவர்களின் கண்களிலே விபரீதக் குறி!' என்று அண்ணா எழுதியதை பிரதமருக்கு நினைவூட்டுகிறோம்.


சாலை ஓரத்திலே தூங்கும் மக்களும், இரவு உணவு இல்லாமல் தூங்கும் 20 கோடி மக்களும் இருக்கிறார்களே - அவர்கள் நிலை மாற 'மன் கி பாத்'களும், சாலையோர வியாபாரிகளுடன் கலந்துறவாடுவதும் காப்பாற்றவே - காப்பாற்றாது!


போப்பாண்டவர் முன்மாதிரி....


முதல் முறையாக முகக்கவசம் அணிந்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட பொது வெளியில் வந்தார் போப்!


சங்கராச்சாரியார் முகக்கவசம் அணிந்து வந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவாரா?


எங்கே பார்ப்போம்!


No comments:

Post a Comment