தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 7, 2020

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட

புதுக்கோட்டை மண்டல கலந்துரையாடலில் முடிவு



புதுக்கோட்டை, செப். 7- புதுக்கோட்டை மண்டலத்தில் பெரியார் அவர்களின் 142-ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து புதுக்கோட்டை மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் இணைய வழி கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது. மண்டலத் தலைவர் பெ. இராவணன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலா ளர் ப.வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல் இளைஞரணிச் செயலாளர் க.வீரையா அனைவரை யும் வரவேற்றார். கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெய ராமன் தொடக்கவுரையாற்றினார்.


கழக மாநில அமைப்பாளர் உரத் தநாடு இரா.குணசேகரன் உரையில், தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதல் களின்படி தந்தை பெரியார் அவர் களின் 142ஆவது பிறந்த நாள் விழா வைக் கொண்டாடுவது குறித்து சிறப் புரையாற்றினார்.


தந்தை பெரியார் காலம் தொட்டு மதவெறி, ஜாதி வெறி எப்படியெல் லாம் சமூகத்தில் தலைதூக்கி நின்று அக்கிரமங்களைச் செய்து வந்திருக் கிறது, அதில் தந்தை பெரியார் அவர் களின் போராட்டக் களங்கள் என் னென்ன, அவரது கொள்கை வழி நின்று இப்போதுவரை தமிழர் தலை வர் அவர்களின் செயல்பாடுகள் என்னென்ன, தந்தை பெரியார் அவர் களை உலகம் முழுவதும் கொண்டு போய்ச் சேர்த்த முறைகள், அதற்கான அவசியம், மானுடம் செழிக்க தந்தை பெரியார் அவர்களின் கொள்கை முழக்கங்கள் என தெளிவான முறை யில் விளக்கிப் பேசினார். மேலும் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலை யில் கருஞ்சட்டை வீரர்கள் ஒவ்வொ ருவரும் தொய்வில்லாமல் செயல்பட வேண்டிய விதங்கள் குறித்தும் ஆளாளுக்கு பிறந்த நாள் விழாவை எப்படியெல்லாம் ஏன் கொண்டாட் டங்களாக ஏற்படுத்துகிறார்கள் என் பதையும் நாம் தந்தை பெரியாரைக் கொண்டாட வேண்டிய நெறிமுறைகள் என்ன என்பதைப் பற்றியும் விளக்கினார்.


இந்நிகழ்வில் மேலும் மாநில பகு த்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் அ.சரவணன், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் வெ.ஆசைத் தம்பி, மண்டலத் தலைவர் தேன் மொழி, ஒசூர் மாவட்டத் தலைவர் வனவேந்தன், மண்டல மாணவர் கழகச் செயலாளர் வழக்குரைஞர் இரா.குமார், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் பெ.அன்பரசன், அறந் தாங்கி யோகராசு, கந்தர்வக்கோட்டை சித்திரைவேலு, பொன்னமராவதி ஆறுமுகம், மாவலி, இளங்கோவன், ஆறு.தமிழன்பு, ஆசிரியர் குணசேக ரன், தூத்துக்குடி கோவில்பட்டி வளர்மதி, நாகராஜன், வீர.வசந்தா, தமிழ்மணி ஈவெரா உள்ளிட்ட தோழர் கள் கலந்து கொண்டு பேசினார்கள். கந்தர்வக்கோட்டை பெரியார் பெருந் தொண்டர் சேகர் நன்றியுரையாற்றினார்.


No comments:

Post a Comment