பழனி கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 14, 2020

பழனி கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்

பழனி, செப். 14- பழனி கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் கோரிக்கடவு சமுதாயக் கூடத்தில் 2.9.2020 புதன் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.


கூட்டத்திற்கு மாவட்ட ப.க. தலைவர் ச.திராவிடச் செல்வன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பெரிய கருப்புச்சாமி வரவேற்று பேசினார். கூட்டத்திற்கு பழனி நகர செயலாளர் சி.இராதாகிருட்டிணன், ரகுமான், பாலன், மானூர் சங்கிலி துரை, ராமலிங்கம், மற்றும் இளைஞ ரணி கொடியரசு, கன்னிமுத்து, ஒன் றியச் செயலாளர், பாலசுப்பிரமணி, ஆசிரியர் வேலுமணி, கருப்புச்சாமி, தமிழ்ச்செல்வன், ஆகியோர் கலந்து கொண்டனர்.


தீர்மானங்கள்



  1. அகால மரணமடைந்த திராவி டர் கழக மாவட்டச் செயலாளர் நல்லதம்பி அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

  2. எதிர்வரும் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண் டாடுவது, அதை முன்னிட்டு 100 சுவ ரொட்டிகள் ஒட்டுவது, 42 இடங் களில் சுவர் விளம்பரங்கள் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

  3. டிசம்பர் 2ஆம் நாள் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள். நம் குடும்பத் தலைவர் தமிழர் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு 88 இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்வது என் றும் சுவர்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால் இப்போதே அப்பணியை துவங்குவது எனவும் தீர்மானிக்கப் பட்டது.

  4. அய்யா அவர்களின் பிறந்த நாளுக்கு மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்குவது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


No comments:

Post a Comment