திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் புதுப்பொலிவுடன் 'தந்தை பெரியார்' சிலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 14, 2020

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் புதுப்பொலிவுடன் 'தந்தை பெரியார்' சிலை


திருச்சி, செப்.14 திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலை மிக முக்கியத்துவம் வாய்ந்த சிலையாகும். இந்த சிலை 1967 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இச்சிலை திறப்பு விழாவில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் களான காமராசர், அண்ணா, கலைஞர் மற்றும் குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர்  பங்கேற்றுள்ளனர். தந்தை பெரியார் அவர்கள் உயிருடன் இருக்கும் போது திறக்கப்பட்ட இச்சிலை திருச்சியின் மய்யப் பகுதியான மத்தியப் பேருந்து நிலையம் பகுதியில் கம்பீரமாக இருந்து வருகிறது.


புதுப்பிப்பு : இச்சிலையின் சுற்றுச்சுவர் வாகனங்கள் மோதியதால் சேதமடைந்திருந்தது. இந்நிலையில் திராவிடர் கழக மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் தலைமையில் தோழர்கள் தி.மு.க. முதன்மை செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேரு அவர்களை நேரில் சந்தித்து பெரியார் சிலையை புதுப்பித்து தருமாறு கோரிக்கை வைத்தனர். அவரும் உடனடியாக செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் சுமார் ரூ.12 லட்சம்  மதிப்பீட்டில் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மேற்பார்வையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரியார் சிலை சீரமைப்புப் பணிகளை  தி.மு.க. முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பின ருமான கே.என்.நேரு  12.9.2020 அன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநில தொழிலாளரணி செயலாளர்  மு.சேகர்,  முன்னாள் மாநகரத் தலைவர் சி.மருதை,  தி.மு.க. மாநகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment