பெங்களூரு, செப்.14, தமிழ கத்தில் 'இந்தி தெரியாது போடா', 'நான் தமிழ் பேசும் இந்தியன்' உள்ளிட்ட முழக்கங்களுடன் பனியனை அணிந்து இளைஞர்களின் இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வு கொந்தளிப்பு வெடித்துள்ளது. திரைத் துறையைச் சேர்ந்த பலரும் இந்தித் திணிப்புக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட பனியனை அணிந்து தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தென் னகத்தில் கருநாடக மாநிலத்திலும் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செப்டம்பர் 14 இந்தி நாளை முன்னிட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கன்னடர்கள் இந்தி எதிர்ப்பு விழிப்புணர்வு பரப் புரையை துவக்கியுள்ளனர். 'இந்தி தெரியாது போடா' என்று கன்ன டத்தில் எழுதிய பனியன்கள்மூலம் இந்தி எதிர்ப்பு பரவி வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment