'நீட்' தேர்வு - தொடரும் அவலம் : அரியலூர் மாணவர் தற்கொலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 10, 2020

'நீட்' தேர்வு - தொடரும் அவலம் : அரியலூர் மாணவர் தற்கொலை

அரியலூர்,செப்.10 அரியலூர் அருகே 'நீட்' தேர்வு காரணமாக கிணற்றில் குதித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார். நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


அரியலூர் மாவட்டம் செந் துறை அடுத்த எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் விசுவநாதன். விவசாயி. இவரது மனைவி தமிழ் செல்வி. இவர்களுக்கு விக்னேஷ்(19), வினோத் (16) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் விக்னேஷ் பத்தாம் வகுப்பில் 487 மதிப்பெண் மற்றும் 2017_-2018ஆம் ஆண்டு பிளஸ்2 தேர்வில் 1006 மதிப்பெண் பெற்றுள் ளார். மருத்துவராக வேண்டும் என்பதே விக்னேஷ் லட்சியம் என்ப தால் நீட் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டு இரண்டு முறை  தேர்வு எழுதியுள்ளார்.


ஆனால், இரண்டு முறையும் குறைந்த மதிப் பெண்களே பெற்று தோல் வியடைந்தார். இந்நிலையில் வருகிற 13ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்காக விண்ணப்பித்து பயிற்சி மேற்கொண்டு வந்தார். மேலும் சமீபத்தில் இணைய வழி மூலம் எழுதிய மாதிரி தேர்வில் 550 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த மதிப் பெண்கள் போதாது என்று நண்பர்கள் கூறிய தாகவும், ஏற்கெனவே இரண்டு முறை தோல் வியடைந்ததால் பயத்தில் இருந்து வந்ததாக வும் தெரிகிறது.


இந் நிலையில், நேற்று (செப்.9) அதி காலை 4 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்ப வில்லை. 10 மணியாகியும் அவரை காணாததால் உற வினர்கள் பல இடங்களில் தேடினர். வீட்டில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிணற்றில் விக்னேஷ் உடல் கிடந்ததை பார்த்து அதிர்ச் சியடைந்தனர். உடனே, உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தக வல் அறிந்த செந்துறை காவல் துறை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், ‘நீட் தேர் வால்தான் விக்னேஷ் உயிர் பறி போனது. உடலை உடல் கூராய் வுக்கு எடுத்து செல்ல அனுமதிக்க மாட் டோம் என கூறி சாலை மறி யலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆண்டி மடம் வட் டாட்சியர் தேன் மொழி பேச்சு வார்த்தை நடத்தி உயரதி காரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற் கொள் வதாக தெரிவித்தார்.  இதையடுத்து, உடலை உடல் கூராய் வுக்காக ஜெயங் கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


No comments:

Post a Comment