புதுச்சேரி, செப்.10 கரோனா பரிசோதனைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு நடத்தினார். புதுவையில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பினை தொடர்ந்து கூடுதல் பரிசோதனைகளை செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும், கோரிமேட்டில் உள்ள கொசு தடுப்பு மற்றும் ஆய்வு மய்யத்திலும் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோரிமேட்டில் உள்ள கொசு தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலகத்தில் நாள்தோறும் 1000 பரிசோதனைகளை மேற் கொள்ள வாய்ப் புகள் உள்ளது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் சுகா தாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அங்கு நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள். மேலும் அவர்கள் முதலியார்பேட்டையில் கரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்ட இடத் துக்கும் சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment