தி.மு.க.  தலைவர்  தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் துரைமுருகன்,  டி.ஆர்.பாலு  பெரியார் நினைவிடத்தில்  மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 10, 2020

தி.மு.க.  தலைவர்  தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் துரைமுருகன்,  டி.ஆர்.பாலு  பெரியார் நினைவிடத்தில்  மரியாதை

கழகத்  துணைத் தலைவர், கழகப் பொதுச்செயலாளர்  வரவேற்பு


க.பொன்முடி-ஆ.இராசா  பெரியார் நினைவிடத்தில்  மரியாதை



தி.மு.க. பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன், பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர்.பாலு ஆகியோர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தனர். அன்னை மணியம்மையார் நினைவிடத்திலும், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்திலும் மலர்த் தூவி மரியாதை செலுத்தினர். தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடன் இவர்கள் வருகை தந்தனர். மூவருக்கும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் சால்வை அணிவித்தார். பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் இயக்க நூல்களை அளித்தார் (9.9.2020).


சென்னை, செப்.10 திராவிட முன் னேற்றக் கழகத்தின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட துரைமுருகன், பொரு ளாளராக பொறுப்பேற்றுக்கொண்ட டி.ஆர்.பாலு இருவரும் திமுக தலைவர் தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (9.9.2020) மாலை சென்னை பெரியார் திடலில் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். அன்னை மணியம்மையார் நினை விடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்திலும்  மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


திராவிடர் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் அனைவரையும் வரவேற்று பயனாடை அணிவித்து, இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய் தார்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்த்துச் செய்தி அளிக் கப்பட்டது.


தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப்பொதுச்செய லாளர் அய்.பெரியசாமி,  சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு, தாயகம் கவி, எழும்பூர் கே.எஸ்.இரவிச்சந்திரன், புரசை ரங்கநாதன் உள்ளிட்ட  திமுக பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.


பெரியார் நினைவிடத்தில் க.பொன்முடி, ஆ.இராசா


மரியாதை


திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்ட க.பொன்முடி, ஆ.இராசா ஆகியோர் இன்று முற்பகல் (10.9.2020) பெரியார் திடலுக்கு வருகை தந்தனர். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் வரவேற்று பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார்கள். பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மையார் நினை விடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.



தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட க.பொன்முடி, ஆ.இராசா ஆகியோர் தந்தை பெரியார் நினைவிடத்திற்கு வருகை தந்து மலர்வளையம் வைத்தனர். அன்னை மணியம்மையார் நினைவிடத்திலும், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்திலும் மலர்த் தூவி மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்  அவர்களுக்கு சால்வை அணிவித்தார். மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இயக்க நூல்களை அளித்தார் (10.9.2020).


No comments:

Post a Comment