வட்டித் தொல்லையால் தொழிலாளி தற்கொலை முயற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 11, 2020

வட்டித் தொல்லையால் தொழிலாளி தற்கொலை முயற்சி

பா.ஜ.க. நிர்வாகிமீது காவல்துறை வழக்குப்பதிவு


கரூர், செப்.11 கரூர் வையாபுரி நகரைச் சேர்ந்தவர் கோபிநாத் (31), வெல்டர். இவரது தாய் சுகுணா (53) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கரூர் லாரிமேட்டில் உள்ள தனியார் நிதி நிறு வனத்தில் ரூ.15 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். 4 மாதங்கள் மட்டுமே சுகுணா வட்டியைச் செலுத்திய நிலையில், அதன்பின் கோபிநாத் கடனுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு கடந்த 2 ஆண்டுகளாக மாதந்தோறும் ரூ.3 ஆயி ரம் வட்டி செலுத்தி வந்துள்ளார்.


கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களாக கோபிநாத் கடனுக்கு வட்டி செலுத்த வில்லை. இந்நிலையில், கடந்த ஆக.31- ஆம் தேதி நிதி நிறுவன மேலாளர் செந்தில்குமார்(39) மற் றும் ஊழியர் பிரகாஷ் ஆகியோர் கோபிநாத் வீட்டுக்குச் சென்று அசல் மற்றும் வட்டித்தொகையை திரும்ப செலுத்தக்கூறி அவரை ஆபாசமாக திட்டி, மிரட்டியுள்ளனர்.


இதையடுத்து, செப்டம்பர் ஒன்றாம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற கோபிநாத், மண்ணெண்ணெயை ஊற் றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். தாந்தோணிமலை காவல்துறையினர் கோபி நாத்தை மீட்டதோடு, அவரை கைது செய்தனர்.


இந்நிலையில், கரூர் நகர காவல் நிலையத்தில் கோபிநாத் நேற்று முன் தினம் அளித்த புகாரின் பேரில் தனியார் நிதி நிறு வன உரிமையாளரும், கரூர் மாவட்ட பாஜக இளை ஞரணி தலைவருமான எம்.கே.கணேசமூர்த்தி,நிதி நிறுவன மேலாளர் செந்தில்குமார், ஊழியர் பிரகாஷ் ஆகிய 3 பேர்மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக் குப் பதிவு செய்தனர். செந்தில் குமாரை கைது செய்துள்ள காவல்துறையினர்,தலை மறைவான மற்ற இருவரை யும் தேடி வருகின்றனர்.


No comments:

Post a Comment