திராவிடர் கழக இளைஞரணி காணொலி கூட்டத்தில் பேராசிரியர் அருணன் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 9, 2020

திராவிடர் கழக இளைஞரணி காணொலி கூட்டத்தில் பேராசிரியர் அருணன் பங்கேற்பு


விருத்தாசலம், செப், 9--- திராவி டர் கழக இளைஞரணி சார் பில் இணைய வழியில் 8ஆவது தொடர்சொற்பொழிவு ‘மதச்சார்பற்ற அரசு’ எனும் தலைப்பில் 30.8.2020 அன்று காணொலியில் நடைபெற்றது.


ஆத்தூர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ப.வேல்முருகன் வரவேற்புரை யாற்றினார். தருமபுரி மண் டல  இளைஞரணி செயலா ளர் வ.ஆறுமுகம்  தலைமை வகித்தார். கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஈரோடு தே.காமராஜ், பொன் னமராவதி வெ.ஆசைத்தம்பி, தஞ்சை இரா.வெற்றிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரை யன் இணைப்புரை வழங்கினார்.


நிறைவாக, தமிழ்நாடு மக் கள் ஒற்றுமை மேடை மாநில அமைப்பாளர் பேராசிரியர் அரு ணன் சிறப்புரையாற்றினார்.


இந்தியாவில் 1400 ஆம் ஆண்டு முதலே அதாவது பல்லவ அரசு, சோழ அரசு, பாண்டிய அரசு ஆகிய கால கட்டங்களில் கூட மதச்சார் பற்ற அரசு இல்லை. ஏன் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் கூட மதச்சார்பற்ற அரசாக இல்லை. 1970 ஆம் ஆண்டு முதல்தான் மதச்சார் பற்ற குடியரசு என அறிவிக் கப்பட்டது. தற்போது மதச் சார்பற்ற எனும் சொல்லுக்கு ஆளும் அரசாங்கம் குந்தகம் ஏற்படுத்தி வருகிறது. அது இந்து ராஷ்டிரா அரசை உரு வாக்க முயல்கிறது. மனுவாத இந்து ராஷ்டிரா அரசை முறி யடிக்க மத நம்பிக்கையாளர் களையும் நாம் திரட்ட வேண் டும் என பேசினார்.


நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில இளைஞரணித் தலை வர் ராஜா, சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ், கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் வழக்குரைஞர் பிரபாகரன், திருச்சி மண்டல இளைஞரணிச் செயலாளர் அன்பு ராஜா, மதுரை மண் டல இளைஞரணிச் செயலா ளர் அழகர்,  தென்சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மணித்துரை, சோழங்கநல்லூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் நித் தியானந்தம், ஈரோடு மண் டல இளைஞரணிச் செயலா ளர் ஜெபராஜ் செல்லதுரை, மாநில துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, புதுவை மாநில தலைவர் சிவ. வீரமணி மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல் வம், விருத்தாசலம் மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன், விருத்தா சலம் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ராமராஜ், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் தஞ்சை மாநகர இளைஞரணி அமைப்பாளர் பெரியார் செல்வம், கடலூர் மாவட்ட மகளிர் பாசறை அமைப்பா ளர் ரமாபிரபா ஜோசப், மத்தூர் அரங்க .ரவி கோவை குணசேகரன், பிரான்ஸ் ரமேஷ், திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் வழக்கு ரைஞர் மதிவதனி, தருமபுரி மண்டல இளைஞரணி செய லாளர் ஆறுமுகம், நீடாமங்க லம் ரமேஷ், கடலூர் மாவட்ட அமைப்பாளர் மணிவேல், அல்லூர் பாலு, ராஜமாணிக் கம், துரைராஜன் உள்பட பலர் கலந்து உட்பட பலர்  கொண் டனர். நிறைவாக குடந்தை மாவட்ட இளைஞரணி தலைவர் க.சிவகுமார் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment