தொழில் மேம்பாட்டிற்காக புதிய இயக்குநர்கள் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 9, 2020

தொழில் மேம்பாட்டிற்காக புதிய இயக்குநர்கள் நியமனம்

சென்னை, செப். 9- நாட்டில் சிறிய ரக கார்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள ஹூண்டாய் மோட் டார் இந்தியா லிமிடெட் (எச்.எம்.அய்.எல்) நிறுவனத் தின் நிர்வாக குழுவில் இரண்டு பேர் புதிய இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


இவர்கள் அடுத்த 3 ஆண்டு களுக்கு இந்தப்பதவியில் இருப்பார்கள். ஆக.24ஆம் தேதியில் இருந்து இவர்களது பதவிக்காலம் தொடங்கியுள் ளது.  எதிர்காலத்தை நோக்கி  நிறுவனத்தை வெற்றிகரமாக வும் அர்த்தமுள்ளதாகவும் அழைத்துச்செல்லும் வகை யில் அதற்கான   யுக்திகளையும் வகுக்க நிறுவனத்திற்கு இவர் கள் வழிகாட்டுவார்கள் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.


எஸ்.கணேஷ்மணி, (ஹூண் டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் இயக்குநர்) தருன் கார்க் (இயக்குர்- விற்பனை பிரிவு, சந்தையிடல், சேவை,) ஆகியோரே இரண்டு புதிய இயக்குநர்கள் என்று நிறுவனத் தின் செய்திக்குறிப்பு தெரிவிக் கிறது.


No comments:

Post a Comment