டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
- விவசாயிகளுக்கு எதிரான மோடி அரசின் மூன்று மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், அதனை முழுமூச்சாக எதிர்க்க டி.ஆர்.எஸ். கட்சியின் தலைவரும் தெலுங்கானா மாநில முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் தனது கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.
- 24 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அடுத்த வார மத்தியில், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முடித்துவிட மக்களவைத் தலைவர் தலைமையில் நடைபெற்ற அலுவல் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெக்கான் கிரானிகல், சென்னை:
- மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று மசோதாக்கள் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக நாளை நடத்துகிறது.
தி டெலிகிராப்:
- இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்கள் பற்றி சீனாவுக்கு உளவு பார்த்ததாக பத்திரிக்கையாளர் ராஜீவ் சர்மா உட்பட மூன்று பேரை டில்லி காவல்துறை கைது செய்துள்ளது. தற்போது தேசிய பாதுகாப்புத் துறை செயலாளராக உள்ள அஜித் தோவலுக்கு நெருக்கமாக இருந்த தாகவும், அவரது விவேகானந்தா பவுண்டேசனில் இணைந்து பணி யாற்றியதாகவும், செய்திகள் வந்துள்ளன.
- இனி 300 பேருக்கு மேல் தொழிலாளர்கள் உள்ள தொழில் நிறு வனங்கள், அரசின் அனுமதி இல்லாமல், வேலை நீக்கம் செய்யலாம் என்கிற வகையில் மசோதாவை மோடி அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
- அரசின் அனைத்து அமைப்புகளும், உச்ச நீதிமன்றம் உட்பட 2014 முதல் ஆட்சியில் உள்ள அரசால் அழிக்கப்படுகிறது என டில்லி உயர் நீதிமன்றத்தின் மேனாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா வேத னையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- மோடி அரசின் பி.எம்.கேர்ஸ் டிரஸ்டிற்கு பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.2100 கோடி நன்கொடை அளித்துள்ளன. ஆயினும், இந்த டிரஸ்ட் எந்த தணிக்கைக்கும் உட்படாது என்பது எப்படி சரியா கும்? தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற முடியாது என்பது மோடி அரசு சொல்லும் வெளிப்படைத்தன்மைக்கு எதிரானது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்ட்ரா மோடி அரசைச் சாடியுள்ளார்.
- மோடி அரசு கொண்டு வரும் விவசாயிகளுக்கு எதிரான மசோதாவிற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாரதீய கிஷான் சங் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- ஜி.எஸ்.டி. வசூலில் மா நிலங்களுக்கு உரிய நிதி பங்கீடு உண்டு என்று சட்டம் இயற்றிவிட்டு அதற்கு மாறாக தற்போது மோடி அரசு மாநிலங்களுக்கு நிதியைத் தர மறுக்கிறது என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.
- குடந்தை கருணா
20.9.2020
No comments:
Post a Comment